உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

15

வெனக்கூறும் முறையில் நிற்கும் இம்மந்திரத்தைத் தூல பஞ்சாக்கரமென்றும், அவ்வாறன்றிச் சிவ வென்னும் மொழியை முன் நிறுத்தி, நம வென்னும் மொழியை அதன்பின் நிறுத்திச் 'சிவாயநம' வெனக்கூறும் முறை எல்லாம்வல்ல சிவபிரானை முதல் நினைத்ததற்கு இடஞ்செய்து அதன்பின் உயிரின் வணக்கத்தை அச்சிவத்தின்கீழ் அடக்குதலின் இதனைச் சூக்கும பஞ்சாக்கரம் என்றும் பழைய திருமந்திரநூலின்கண் மா முனிவரான திருமூலநாயனார் அருளிச்செய்வர்; அது, தூல பஞ்சாக்கரம் என்னுந் தலைப்பின் கீழ்

66

அகார முதலாக ஐம்பத்தொன் றாகி

உகார முதலாக ஓங்கி யுதித்து

மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி”

“நகார முதலாகு நந்திதன் நாமமே” எனவும், சூக்கும பஞ்சாக்கரம்

எனுந் தலைப்பின் கீழ்

D

6

எளிய வாதுசெய் வாரெங்கள் ஈசனை

ஒளியை யுன்னி மருகு மனத்தராய்த்

தெளிய ஓதிச் சிவாய நமவெனுங்

குளிகை யிட்டுப்பொன் ஆக்குவன் கூட்டையே”

எனவும் அவ்விருவகை முறையும் விளங்க ஓதியருளிய வாற்றால் அறியப்படும். இச் சூக்கும பஞ்சாக்கரமாகிய 'சிவாயநம' எனும் மந்திரத்திற் சி என்னும் எழுத்துக் கடவு ளையும், வா என்னும் எழுத்து அம் முதற்கடவுளோடு உடனாய் நிற்கும் திருவருளையும், ய என்னும் எழுத்து உயிரையும், ந என்னும் எழுத்து மும்மலங்களையுந் தத்தம் தொழில்களின் ஏவிப் பாகம் வருவித்தற் பொருட்டு அவற்றோடு உடனாய் நின்று உயிரை மறைத்தலாற் றிரோதசத்தி யென்றும் திரோதமல மென்றுங் கூறப்படுவதாகிய சிவ சத்தியையும், ம என்னும் எழுத்து உயிரைக் கட்டி நிற்கும் ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களையும் உணர்த்தும் ஒலிக்குறிகளா மென்று தொல்லாசிரியரான திருமூலர் ஓதுமாறு,

66

“சிவன்சத்தி சீவன் செறுமல மாயை அவஞ்சேர்த்த பாச தலமைந் தகலச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/48&oldid=1589186" இலிருந்து மீள்விக்கப்பட்டது