உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மறைமலையம் - 25

சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர

அவஞ்சேர்த்த பாசம் அணுககி லாவே” எனவும்

“சிவனருள் ஆய சிவன்றிரு நாமஞ்

சிவனருள் ஆன்மாத் திரோ தமல மாயை

சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்

மே

பவம தகன்று பரசிவ னாமே

எனவும் போந்த திருமந்திரச்செய்யுட்களாய் உணரப்படும்; இவ்விரண்டில் முதற் செய்யுட்கண் உள்ள 'சிவன் சத்தி சீவன் செறுமல மாயை, அவஞ்சேர்த்த பாச மலமைந் தகல' என்னும் இரண்டடிகளிற் ‘சிவன் சிகாரத்தையும்; சத்தி வகாரத்தையும்; சீவன் யகாரத்தையும்; செறுமலம் சினக்கின்ற திரோதமலமாகிய நகாரத்தையும்; மாயை சுத்த மாயை அசுத்த மாயை என்னும் இரண்டும், ‘அவம் சேர்த்த பாசம்' கீழ்மைப் படுத்தும் ஆணவங் கன்மம் இரண்டும் மகாரத்தையும்' உணர்த்துவனாம்; ‘மலம் ஐந்தகல' என்றது மேற்சொல்லிய திரோதம் சுத்த மாயை அசுத்த மாயை ஆணவம் கன்மம் என்னும் ஐந்தையும்; மலங்களோடு உடனாய் நின்று செலுத்துதல் பற்றிச் சிவசத்தியாகிய ய திரோதமும் மலமென வைக்கப்பட்டது. ‘செறுமலம்’ சினக்கும் மலம் என்று பொருள்படுமாறு "சினமருவு திரோதாயி" எனச் சிவப் பிரகாசத் துட் போந்தமையால் நன்கு விளங்கும்; உயிர்களினின்று மலங்களை அகற்றுவான் வேண்டி அவற்றைச் சினந்து ஏவுதலின் 'சினமருவு திரோதாயி' என்று உரைக்கப் பட்டது.

மேலிரண்டடிகளுக்கும் இங்ஙனம் பொருளுரைத்தலே ஆசிரியர் திருமூலநாயனார் கருத்தாமென்பது அவர் அதனை அடுத்தோதிய 'சிவனருளாய சிவன்றிரு நாமஞ், சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாயை' என்னுஞ் செய்யுளால் நன்கு விளங்கும்; இவ்வாறு பொருளுரைக்க அறியாதார் தமக்கு வேண்டியவாறெல்லாம் உரைப்ப. சூக்கும பஞ்சாக்கரம் ‘சிவ’ என்பதனை முதலாக வைத்து ‘நம’ என்பதனை இறுதியாக வைத்து ‘யகாரத்தை' இடையில் நிறுத்திச் ‘சிவாய நம' வென்று ஓதப்படுமென்பதற்குச் “சிவனருளாய சிவன்றிருநாமம்” என்றும், “சிவன் முதலாகச் சிறந்து” என்றுங் கூறினமையே சான்றாம். முழுமுதற் கடவுட்கட்கும் முதற்கண் வைத்துப் பலகாலுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/49&oldid=1589188" இலிருந்து மீள்விக்கப்பட்டது