உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

17

சொல்லுதலால் அவ்விரண்டையும் பற்றிய நினைவே அவற்றை ஓதும் உயிரின்கண் மேற்பட்டு நிற்க. மலமாயா கன்மங்களுக்கு அடையாளங்களாகக் கீழ் நிற்கும் நகார மகாரங்களைப் பற்றிய நினைவு கீழ்ப்பட்டுப் போக, உயிரின் அடையாளமான யகாரம் சிகார வகாரங்களைச் சேர்ந்து நிற்றலின் அஃது அவ்வுயிரை வகாரமாகிய அருளிற் படிவிக்க, அஃது அதனை ஈர்த்துக்கொண்டுபோய்ச் சிகாரமாகிய சிவத்தில் ஒன்றுபடுத்து மென்க. இவ்வியல்பு,

"சிவன்அருள் ஆவி திரோதமல மைந்தும்

எனவும்

66

அவனெழுத் தஞ்சின் அடைவாம் - இவனின்று நம்முதலா ஓதில்அருள் நாடாது, நாடும் அருள் சிம்முதலா ஓதுநீ சென்று’’

وو

'அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும் எண்ணில் இராப்பகல்அற் றின்பத்தே - நண்ணி அருளா னதுசிவத்தே ஆக்கும் அணுவை இருளா னதுதீர இன்று

எனவும் போந்த உண்மை விளக்கச் செய்யுட்களாலும் இனிதுணரப்படும்.

இனி, அதிசூக்கும பஞ்சாக்கர மென்பது, ‘நம’ வென்னும் மல வெழுத்துக்களை அறவே விட்டுச் ‘சிவாய சிவ' வென்று ஓதப்படுவதாகும். இஃது 'அதிசூக்கும பஞ்சாக்கரம்’ என்னுந் தலைப்பின்கீழ் ஆசிரியர் திருமூலநாயனார்,

“சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயங் கெடநிற்க ஆனந்தம் ஆமே”

என்று உரைத்தருளினமையால் அறியப்படும். இதனுள் அவாயங் கெட’ என்பது ‘அழிவினைச் செய்யும் மல எழுத்துக் களான நகார மகாரங்கள் கெட' என்னும் பொருட்டாம். இம் மல எழுத்துக்களை உரைத்தல் ஒழித்து, ஆன்ம எழுத்தாகிய யகாரம் இடை நிற்கச் சிவ வென்னும் மொழியை அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/50&oldid=1589191" இலிருந்து மீள்விக்கப்பட்டது