உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் - 25

முன்னும் பின்னும் நிறுத்திச் 'சிவயசிவ' என்று ஓதல்வேண்டு மென்பது தொல்லாசிரியரான திருமூலர் கட்டளையிட்டருளிய வாற்றால் தெற்றெனப் பெறப்படும். இனிப் பிற்றை ஞான்றைச் சித்தாந்த ஆசிரியரான உமாபதி சிவனார்,

66

ஆசினவா நாப்பண் அடையா தருளினால்

வாசியிடை நிற்கை வழக்கு

என்று ஓதியருளியவாறே வகார சிகாரங்களின் நடுவே யகாரத்தை நிறுத்தி ‘வயசி' என்று கூறுதலும், மேலெடுத்துக் காட்டிய பண்டையாசிரியர் கிளந்துரைத்த ‘சிவயசிவ' என்னும் மந்திரத்தின் இடை நிற்பதே யாகலின் இஃது அதனோடு மாறுகொள்ளாதென்று கடைப்பிடிக்க. இவ்வுண்மை காண மாட்டாதார் சிகார வகாரங்கள் இரண்டனையும் எதிர்நிரல் நிறையாக நிறுத்தி யகாரத்தை நடுவே வைத்து விகடகவி என்றாற்போலச் 'சிவயசிவ' எனக் கூறுதலே அதிசூக்கும பஞ்சாக்கரமா மென்று முன்னையாசிரியர் மேற்கோளுக்கு மாறாகக் கூறுவர். உயிர் அருளுக்குப் புறம்பே நிற்குமாயின் அஃது அதனாற் செலுத்தப்படாமையாற் சிவத்தை அடையாது; ஆகவே ஆன்ம வெழுத்தாகிய யகாரத்தை அருளெழுத்தாகிய வகாரத்திற்குப் புறத்தே வைத்துரைக்கும் முறை பெரும்பயனைத் தருவதன்றாய் ஒழியும். மற்றுச் சிவத்தையே நோக்கி நிற்கும் அருளுக்கும் அவ்வருளோடு ஒன்றுபட்டு நிற்குஞ் சிவத்திற்கும் இடையே உயிர் தன்னை நிறுத்துமாயின், அவ்வாறு தனக்குஞ் சிவத்திற்கும் நடுநின்ற அவ்வுயிரை அருள் சிவத்தில் உந்திப் படிவிக்கும் ‘சிவாய நம' என்னுஞ் சூக்கும பஞ்சாக்கர முறையில் மலங்களைக் கீழ்ப்படுத்து அருளைச் சார்ந்து அருள் வண்ணமாய் நின்ற உயிர் பின்னர் அதனூடு சென்று அதனையுந் தாண்டிச் சிவத்தை நோக்கி நிற்கச், சிவத்தைப் பிரிந்துநில்லாத அருள் இடைநின்ற அவ்வுயிரை நெருக்கிச் சிவத்திற் றோய்ப் பித்து மனமொழிகளுக்கு எட்டாப் பேரின்பப் பேற்றினை நல்கும் இவ்வீடுபேற்றின்ப நிலையினையும், இதனைத் தெ தரிக்கும் அதிசூக்கும பஞ்சாக்கர இயல்பினையும் முற்றும் உணர்ந்த பட்டினத்தடிகள்,

“மாயநட் டோரையும் மாயா மலமெனும் மாதரையும் வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/51&oldid=1589192" இலிருந்து மீள்விக்கப்பட்டது