உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந் தேயு மதேநிட்டை என்றான் எழில்கச்சி ஏகம்பனே”

19

என்று இவ்வுண்மையைத் தெளிய வுணர்த்தினமை காண்க. இதனுள் 'மாயநட்டோர்' என்றது மறைத்தற் றொழிலாகிய மாயத்தை செய்தே நட்பாய் நின்று உயிருக்கு நலம்புரிந்து வரும் நகாரமாகிய திரோதசத்தியை. 'மாயாமலம்' என்றது பண்டு தொட்டே உயிரின் அறிவு செயல் வேட்கைகளை முழுதும் மறைத்துநிற்கும் அறியாமையும், அதன் சேர்க்கையால் உயிரின் கட்டோன்றும் இருவினைகளும், அவ்விருவினை நுகர்ச்சிக் கிடனாய் உயிரின் அறிவு செயல் வேட்கைகளின் விளக்கத்திற்குக் கருவியாய் உதவும் மாயையும் ஆகிய மகாரத்தை. நகார மகாரமாகிய இவ்விரண்டுந் தஞ் செயலற்றுக்கிடக்க அவற்றைப் போகவிட்டுச் 'சிவய' என்று அருளாகிய தாயுடன் சென்று, பின்னர்ச் ‘சிவயசிவ' என்று தந்தையைக் கூடி நிற்குமாறு ஓதற்பாலதாகிய அதிசூக்கும பஞ்சாக்கர வியல்பு இதன்கண் நன்கெடுத்து அறிவுறுக்கப் பட்டமை காண்க. இத்துணை நுணுக்கமான இவ்வைந்தெழுத்துண்மை தெருளமாட்டா ா தார்க்கும் அதனைத் தெருட்டுதற் பொருட்டன்றே ‘சோமாஸ் கந்தமூர்த்தம்’ திருக்கோயில்களில் வைக்கப்படுவதாயிற்று; அத்திருவுருவத்தின்கட் சிவபிரான் முதலிலும் அருள் வடி வாகிய அம்மை கடையிலும் பரமான்மாவாகிய கந்தர் டையிலும் இருக்கும் இருப்பு முதலிற் சிகாரமும் கடையில் வகாரமும் இடையில் யகாரமும் நிற்றற்குரிய இவ்வதிசூக்கும பஞ்சாக்கர முறையினைத் தெரித்தல் காண்க.

இனித் தொல்லாசிரியரான திருமூலநாயனாரும், அவர்க்குப் பின்னே வந்த சித்தாந்த ஆசிரியரான உமாபதி சிவனாரும் தூலம் சூக்குமம் அதிசூக்குமம் எனப் பஞ்சாக் கரத்தை ஓதும் முறை மூன்றே கூறினாராக, அவ்வுண்மை தேற மாட்டாத சைவரிற் சிலர் மாயாவாத நூற்பயிற்சியான் அறிவு மயங்கி இம்மூன்றன் மேலும் வேறிருமுறையும் உண்டென்று கூறப் புகுந்து இழுக் கினார். அவர் யகாரமாகிய ஆன்மா வகாரமாகிய அருளிலே ஒடுங்கிப்போக 'வசி' எனும் இரண்டெழுத்தளவாய் ஓதப் பெறுவதை மகாகாரண பஞ்சாக்கரமா மென்றும், இஃது அதி சூக்கும பஞ்சாக்கரத் தினும் மேலாவதா மென்றும் உரைப்பர். “முத்தியினும் மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/52&oldid=1589194" இலிருந்து மீள்விக்கப்பட்டது