உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் - 25

முதலும்” உண்டென்று பதிபசு பாசங்களை வற்புறுக்குஞ் சைவ சித்தாந்தத்திற்கு அந்நிலையில் ஆன்மாவை அழித்துரைக்கும் மாயாவாதக்கோள் ஒரு சிறிதும் ஏலாமையானும், பெறுவா னாகிய யகாரம் இவ்வழிப் பேரின்பப் பொருளாகிய சிவத்தை உணர்ந்து ஓதப்படும் மகாகாரண பஞ்சாக்கரம் உண்டென்றல் மலடிமைந்தன் முயற்கோடு முதலியனவாக அவர் அடுத்தடுத்து ஆளும் உவமைகள்போல் நகையாடுதற்கு ஏதுவா மாகலானும் தொல்லாசிரியர் மெய்யுரையோடு

அவ்வாறுரைத்தல் மாறுபட்டு வழுவாமென்று கடைப்பிடிக்க. மேலும் அவர் அங்ஙனம் வழுப்படக்கூறிய தல்லாமலும் திருமந்திரத்தில் இல்லாத 'வாசிவா வென்று வாசியை வைத்து' என்னும் ஒரு செய்யுளைத் திருமந்திரப் பாட்டாக எடுத்துக்காட்டியும் பிழைபட்டார்.

இன்னும் இத்துணையின் நில்லாது, வகாரமாகிய அருள் சிகாரமாகிய சிவத்தில் ஒடுங்கிப்போகச் சிகாரமட்டும் எஞ்சித் தனி நின்று விளங்குவதே முத்திபஞ்சாக்கரமா மென்று அதன் மேலும் ஒன்றுகூறித் திருமந்திரத்தின்கண் இல்லாத “நாயோட்டு மந்திர நான்மறை வேதம்” என்னும் செய்யுளைத் திருமூல நாயனார் அருளிச் செய்த தெனவும் பிழைபட வுரைத்தார். சுத்தமாயை அசுத்தமாயையுட்பட்ட தத்துவங்கட்குத் தோற்ற வொடுக்கங்கள் கூறுதலே சைவ சித்தாந்த மரபாமன்றி, அருளையின்றி நில்லாத சிவத்திற்குஞ் சிவத்தையின்றி நில்லாத அருளுக்குந்தோற்ற வொடுக்கங்கள் கூறுதல் அதற்குச் சிறிதும் மரபாகாமையானும், இஃது,

66

அருளுண்டாம் ஈசற் கதுசத்தி யன்றே அருளும் அவனன்றி யில்லை - அருளின்(று)

அவனன்றே யில்லை அருட்கண்ணார் கண்ணுக்(கு) இரவிபோல் நிற்கும்அரன் ஏய்ந்து

என்னுஞ் சிவஞானபோதத் திருமொழியும்,

66

எனவும்

சத்திதான் மரமுங் காழ்ப்பும்,

இருமையும் போலமன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/53&oldid=1589196" இலிருந்து மீள்விக்கப்பட்டது