உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

“பொன்மைநீ லாதிவன்னம் பொருந்திடப் பளிங்க வற்றின் றன்மையாய் நிற்கு மாபோற் சத்திதன் பேத மெல்லாம் நின்மலன் றானாய்த் தோன்றி நிலைமையொன் றாயே நிற்பன்”

எனவும் போந்த சிவஞானசித்தித் திருமொழியும்

“பொன்னிறங் கட்டியினும் பூணினும் நின்றாற்போல்

அந்நிறம் அண்ணலும் அம்பிகையும் - செந்நிறத்தள் எந்நிறத்த ளாயிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்த னாய்இருப்பன் ஆங்கு”

21

என்னும் திருக்களிற்றுப்படியார் திருப்பாட்டும் விளக்கு வது கொண்டு நன்கறியப்படுதலானும் அருள் சிவத்தில் டுங்கிப் போகச் சிவம்மட்டும் எஞ்சித் தனியேநிற்கு மென்றல் பெரிதும் பிழைபாடு உடைத்தாமென்க. எனவே, 'நமச்சிவாய’ எனும் பஞ்சாக்கரத்தை ஓதும் முறை தூலம் சூக்குமம் அதிசூக்குமம் என மூன்றேயா மென்பதும், இங்ஙனம் மூவகைப் படுத்துரைத்தலே உத்தியானும் அளவைகளானும் உண்மை நூலானும் ஆராய்ந்து கண்ட முடிபாகிய சைவசித்தாந்தத் திற்கும், தொல்லாசிரியரான திருமூலநாயனார் அருளிச் செய்த திருமந்திரம், சித்தாந்த ஆசிரியரிற் பிற்காலத்தவரான உமாபதி சிவனார் அருளிச் செய்த திருவருட்பயன் முதலான மெய்ந் நூல்கட்கும் இயைவதாமன்றி, இவை மூன்றன் மேலும் வேறிருமுறையு முண்டென்றல் ஒருவாற்றானும் பொருந்தாதா மென்பதும் கடைப்பிடிக்க. அல்லதூஉம், பஞ்சாக்கரம் ஐந்தெழுத்தாய் நிற்கும் மந்திரம் என்பது பிறழாமல் தொல்லா சிரியரான திருமூலநாயனார் ஓதிய தூலம் சூக்குமம் அதி சூக்குமம் எனும் மூவகை முறையினும் அவ்வைந்தெழுத்துக்களே நிலைபேறுற்று நிற்கின்றன. மற்று, மாயாவாதநூல்பற்றி மயங்கி இவற்றின்மேலும், வசி என்னும் ஈரெழுத்தாலாகிய மகாகாரண பஞ்சாக்கரமும், சி என்னும் ஓரெழுத்தாலாகிய முத்தி பஞ்சாக்கரமும் உண்டென்று கூறுவார்க்குப் பஞ்சாக்கரம் என்றதற்கேற்ப ஐந்தெழுத்தில்லாமல் ஈரெழுத்தும் ஓரெழுத்தும் நின்று அம்மந்திரப் பெயர்க்கு மாறுபடும் பிழைபாடு உண்டாத லாலும் அது பொருந்தாதென மறுக்க. இத்திருவாசகத் திருமறையின் முதல் நின்ற இவ்வரும் பெறற் பஞ்சாக்கர மந்திரம் இதற்கும் சைவசித்தாந்தத்திற்கும் ஆரியவேதாமங்கட்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/54&oldid=1589197" இலிருந்து மீள்விக்கப்பட்டது