உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

❖ 25❖ மறைமலையம் – 25

உயிர்போற் சிறந்து நிற்றலின் இதன் இயல்பு இத்துணையும் விரிக்கவேண்டிற்று; இன்னும் விரிப்பிற் பெருகும்.

நமச்சிவாய வாழ்க -நமச்சிவாய வென்னும் திருவைந் தெழுத்து வாழ்வதாக

நாதன் தாள் வாழ்க - அத்திருவைந்தெழுத்தைச் சொல்லுங் காற் பிறக்கும் நாத தத்துவத்தின்கண் விளங்குவோன்றன் திருவடி வாழ்க.

லியெழுத்துப் புலப்பட்ட வடிவும் புலப்படாத வடிவுமென இருவகை நிலையினை யுடைத்து. புலப்படாத நிலையில் உள்ளது ‘விந்து' வென்றும், புலப்பட்ட நிலையில் நிற்பது 'நாதம்' என்றுஞ் சொல்லப்படும். நாதம் எனினும் ஓசையெனினும் ஒக்கும். புலப்படாது அருவாய்கிடந்த விந்து மாயையில் திருவருட்சத்தி தோய்ந்து அதனைக் கலக்கிய அளவானே ஆண்டு நின்றும் ஓர் ஓசையுண்டாக, அவ்வோசை கீழ்நின்ற அசுத்த மாயையை இயக்கி அதனின்று ஒன்றி னான்று பரியவான பொருள்களையும் இறுதியில் வான் வளி தீ நீர் மண் என்னும் ஐம்பொருள்களாற் றிரண்ட உலகங் களையும் தோற்றுவிக்கும். இது.

66

விந்துவின் மாயை யாகி மாயையின் அவ்வி யத்தம் வந்திடும் விந்துத் தன்பால் வைகரி யாதி மாயை

முந்திடும் அராக மாதி முக்குண மாதி மூலம்

தந்திடுஞ் சிவன வன்றன் சந்நிதி தன்னின் நின்றே”

என்னுஞ் சிவஞான சித்தியார் திருப்பாட்டால் உணரப்படும். பிற்காலத்துச் சான்றோரான குமரகுருபர அடிகளும்,

“பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும் நாமநீர் வரைப்பின் நானில வளாகமும் ஏனைய புவனமும் எண்நீங் குயிரும்

தானே வகுத்ததுன் தமருகக் கரமே

என்று அருளிச் செய்தமை காண்க. இறைவனது திருக் கையிற் காணப்படும் உடுக்கைச் சிறுபறை விந்து தத்துவத்திற்கு அடையாளமாம்; விந்து வட்ட வடிவினதாதல் போல அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/55&oldid=1589198" இலிருந்து மீள்விக்கப்பட்டது