உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

23

உடுக்கையின் வாயும் வட்டமாயிருத்தலானும், விந்துவின்கண் நாதம் உண்டாதல் போல அவ்வுடுக்கை வாயினின்றும் ஓசை யுண்டாதலானும் இஃது அதற்கு அறிகுறியாதல் நன்குணரப் படும். திருவாத வூரடிகளும் இத்திருவாசகத்துள் “நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்" எனவும், "ஞானவாள் ஏந்தும் ஐயர் நாதப்பறை அறைமின்” எனவும், “வேதமொழியர் வண்ணீற்றர் செம்மேனியர், நாதப்பறையினர் அன்னே என்னும்” எனவும் ஆண்டாண்டு நாததத்துவத்தைப் பறையாக உருவகப்படுத்திக் கூறுதல் காண்க. உலகத்தோற்றத்திற்குக் கருவியான நாதத்தில் திருவருட்சத்தியும் அச்சத்தியோடு னாய் நிற்கும் சிவமும் முனைத்து விளங்கும் இயைபுபற்றி இறைவனை ஈண்டு ‘நாதன்' என்றார். நாதத்தின்கண்ணும், நாதத்திற் பிரிந்திசைக்கும் வெவ்வேறெகுத்தொலிகளாம். மந்திரங்களினும் இறைவன் முனைத்து விளங்குதலாகிய ஒற்றுமை நயம்பற்றி அவை அவனுக்கு வடிவமாகச் சொல்லப் படுமென்றற்குச்

66

ம்

“சுத்தமாம் விந்துத் தன்னில் தோன்றி ஆத லானும்

ல்

சத்திதான் பிரேரித் துப்பின் தான் அதிட்டித்துக் கொண்டே அத்தினாற் புத்தி முத்தி அளித்தலால் அரனுக் கென்றே வைத்ததாம் மந்திரங்கள் வடிவென மறைக ளெல்லாம்’

என் னுஞ் சிவஞானசித்தித் திருச்செய்யுள் சான்றாதல் காண்க.

இனி, நாதன் எனுஞ்சொல் வடமொழியில் இருவேறு வகையாகச் சொல்லப்பட்டு ஒருகால் தலைவன் என்னும் பொருளையும், பிறிதொருகால் ஓசை என்னும் பொருளையுந் தருதலின், அச்சொல் தமிழின் கட் பொதுப்பட நின்று அவ்விரு பொருளினையும் உணர்த்தும். அவ்விரண்டிற் பிற்கூறிய பொருள் பற்றி எல்லா ஓசைகட்கும் முதலான நாதத்தினுள் விளங்குவோன் என்று முன் உரைத்ததுபோல, முற்கூறிய பொருள்பற்றி எல்லாவற்றிற்குந் தலைவன் என்றும் பொருளு ரைத்துக்கொள்க. இச்சொல்லுக்கு இவ்வாறு இருபொருளும் உரைத்தல் அடிகட்குக் கருத்தாதல் “நாதப்பறையினர் நான்முகன் மாலுக்கும், நாதர் இந்நாதனார் அன்னே என்னும்” என்புழி அவ்விருபொருளும் உடன்றோன்ற அதனை வழங்குதலால் அறியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/56&oldid=1589199" இலிருந்து மீள்விக்கப்பட்டது