உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் - 25

இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க - கண் இடை ஒருகாற் பொருந்தும் ஒரு சிறுநேரமும் என் நெஞ்சினின்றும் அகலாதவனுடைய திருவடி வாழ்க.

ஒருகால் ஒருவற்குக் கண்ணிமை இயல்பாற் பொருந்து நேரமே மிகச்சிறிய காலப்பகுதியாமென்று தொல்லாசிரிய ரெல்லாம் உரைத்தலின் அடிகளும் அதனையே ஈண்டு எடுத்துக் காட்டினார். ஆசிரியர் தொல்காப்பியனாரும் “கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை, நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே” என்று கூறினார். அன்பால் உருகும் அடியாரது நெஞ்சத் தாமரையில்இறைவன் என்றும் விளங்கியிருத்தலின் இங்ஙனம் அருளிச் செய்தார். தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார், நில மிசை நீடுவாழ்வார்” என்று அருளினமை காண்க. இங்ஙனமே சைவல்யோபநிடதமும் நெஞ்சத்தாமரையில் அம்மையப்பராய் இனிதெழுந்தருளியிருக்குஞ் சிவபிரானியல்பை “ஹ்ருத் புண்டரீகம்” என்னும் மந்திரத்தால் விரித்தோதுமாறு காண்க.

என்

நெஞ்சின்' என்பதில் என்’ எனுஞ்சொல் 'ஏழையேனாகிய எனது' எனுந் தாழ்மைக்குறிப்புணர நின்றது. எல்லா நெஞ்சினையும் ஒரு பொருட்டாக்கி அதனின்று ஓரிமைப் பொழுதும் அகலாது எழுந்தருளியது ஒரு வியப்பென அவனது அருணிலையை வியந்து கூறியவாறாம். அதனான் இது தற்புகழ்ச்சியன்மை அறிக. இவ்வாறு வருமிடங்கடோறும் ங்ஙனமே தாழ்மைப் பொருள் உரைத்துக் கொள்க.

இனி, எண்சாண் உடம்பிற்குச் சிறந்த தலையின் அகத்தை இறைவனுக்கு இருப்பிடமாய் ஓதாது அதற்குக் கீழ்நின்ற நெஞ்சினை அவன் நீங்காது உறையுமிடமாகக் கூறுதல் என்னையெனின்; உட்கொண்ட உணவு இரைப்பையிற் பாலுஞ் சக்கையுமாகப் பிரிபட்டுச், சக்கை கீழே கழிக்கப்பட்டுப் போகப், பால் மேலெழுந்து தாமரைமுகைவடிவாய்க் கீழ் நோக்கித் தொங்கும் நெஞ்சப்பையினுட்புகுந்து இரத்தமாக மாறி ஆண்டு நின்றும் உடம்பின் மேலுங்கீழுமாய்ச் செல்லும் பல்லாயிர நரம்புகளின் வழியோடி உடம்பின்கண் அமைந்த எல்லா உறுப்புக்களையும் வளர்த்து வருதலானும், நெஞ்சப் பையினுள் நிகழும் இந்நிகழ்ச்சிக்கு இன்றியமையாததான மூச்சின் ஓட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/57&oldid=1589202" இலிருந்து மீள்விக்கப்பட்டது