உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

25

இவ்விடத்தின்றி வேறெவ்விடத்தும் நிகழக் காணாமையானும், தலையின் உட்கருவியான மூளை ஒருவன் விழித்திருக்குங்காற் றொழில் புரிவதன்றி அவன் அயர்ந்துறங்குங் காற் றொழிற் படாதாக நெஞ்சினுள் நிகழ்ச்சியோ விழிப்பினும் உறக்கத்தினும் ஓவாது நடைபெறக் காண்டலானும், அறிவு நிகழ்ச்சிக்கு இடமாகிய மூளைபோலாது அறிவினும் மேற்பட்ட அன்பு நிகழ்ச்சிக்கு இடமாவது நெஞ்சம் ஒன்றுமே யாகலானும், அன்பின்கண் மட்டுமே சிவம் ஒன்றுகூடி விளங்குமென்பதற்கு,

66

“அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தியாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தியாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”

என்னுந் திருமந்திரத் திருப்பாட்டே சான்றா மாகலானும் அவ்வன்பு சுரந்து பொங்குதற்கிடமான நெஞ்சத்தாமரையே இறைவற்குச் சிறந்த இடமாக வைத்து ஓதப்படுவதாயிற்று. இந்நெஞ்சத்தாமரையினுள் ஓவாது நிகழுங் காற்றினோட் டத்தை நடைபெறுவிக்கும் இறைவன்றிருவரு ளியக்கமே ‘திருக்கூத்து” என்று நுவலப்படும். மக்களுடன்பின் அகத்தே நெஞ்சத் தாமரையின் அருள் வெளியிலே நடவாநிற்கும் இறைவன் அருட்கூத்தின் இயல்பு, புறத்தே இந்நிலவுடம்பிற்கு நெஞ்சத் தாமரையாக விளங்கா நின்ற தில்லைச்சிற்றம்பலத்தே கட்புலனெதிரேயுங் காணப்படும். அகத்தும் புறத்தும் அருந்தவத் தோரால் அறியப்படும். இத்திருக்கூத்தின்றன்மை ‘தகரவித்தை’ என்று வட நூல்களுள்ளுங் கூறப்படும். இத்தகர வித்தையின் இயல்பு 'தைத்திரீயம்”நாராயணம்' ‘சாந்தோக்யிம்’ ‘பிருக தாணியகம்' முதலான உபநிடதங்களில் 'இறைவன்’என்னும் பொதுப்பெயர் மேற்றாக வைத்து உரைக்கப்படும்; மற்றுக் கைவல்யோபநிடதத்தின் கண்ணோ 'சிவம்' என்னுஞ் சிறப்புப் பெயர்மேற்றாகவைத்து உரைக்கப்படும்; பொதுப் பெயர் சிறப்புப் பெயர் இரண்டானுங் குறிக்கப்படும் பிறப்பிறப்பில்லா முழுமுதற்கடவுள் ஒன்றேயாகலானும், முழுமுதற் கடவுட் டன்மை இறப்புப்பிறப்பு யாண்டுஞ் சொல்லப்படாத சிவபிரான் ஒருவற்கே ஏற்குமன்றி அவை யிரண்டனுட்பட்டுச் சுழலும் உயிர்கட்கு ஏலாமையானும் எல்லா உபநிடதங்களும் சிவபிரான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/58&oldid=1589204" இலிருந்து மீள்விக்கப்பட்டது