உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

26

மறைமலையம் - 25

-

நெஞ்சத்தாமரையின்கண் இயற்றுந் திருக்கூத்தையே சிறந் தெடுத்துக் கூறலாயின வென்க. இதுபற்றியன்றே, எசுர் சாம அதர்வண மறைகட்குப் பொதுவாயும் இருக்கு மாமறைக்குச் சிறப்பாயும் 'நிருத்தம்’ வகுத்தருளிய ஆசிரியர் யாஸ்கமுனிவர் ‘அந்தரிட்ச தேவதைகளைக் குறித்து வீட்டு நெறியைக் காட்டும் இடத்தின்கண் ‘தேவதா சார்வபௌடப்' பொருளுக்குச் சிவ என்ற சொல்லையே இடுகுறிப் பெயராக்கி அழைப்பாராயினர்.” அல்லதூஉம், உயிர் உடம்பின்கண் நிற்றற்பொருட்டுச் சிவபிரான் நெஞ்சத்தாமரையினுள்ளே அருள்வெளியிற் றிருக்கூத்து இயற்றும் இவ்வியல்பை நுனித்துக் காண்பார்க்கு எல்லாப் பேறுகளும் எளிதில் வருவதுடன் அவருடம்பும் அழிவின்றி நிலைபெறும். இது திருமூலநாயனார் அருளிச் செய்த

“நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்துதலைப் பெய்யுந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே”

என்னுந் திருப்பாட்டால் நன்குணரப்படும்.

இனி, இவ்வுள்ளத்தாமரை இறைவன் எழுந்தருளியிருத் தற்குக் கழிபெருஞ்சிறப்புடைய இடமாய் இருத்தலினாலும், றைவனோடு உடனாய் நின்றன்றி ஒரு சிறிதும் இயங்க மாட்டாத உயிர் அவன் இயக்குமிடத்திருந்தே இயங்குமென்பது பெறப்படுதலினாலும் இவ்வுடம்பகத்து இயங்கும் உயிர்க்கு இருப்பிடமாவதும் இந்நெஞ்சத்தாமரையின் உள்வெளியேயா மென்று கடைப்பிடிக்க. விழிப்பு நிலையில் இறைவன் திருவருட் கூத்தால் உந்தப்பட்டு இயங்கும் உயிர் தலையின்கண் மூளையைக் கருவியாகப் பற்றிக் கொண்டு காணல் கேட்டல் உண்ணல் உறுதல் உயிர்த்தல் முதலான தொழில்களையும் அவை வாயிலாக வரும் அறிவு நினைவுகளையும் உடையதாய் நிற்கும். மற்று உறக்க நிலையில் அது மூளையைப் பற்றுதல் ஒழிந்து நெஞ்சத் தாமரையின் உள்ளே சென்று ஒடுங்கி இறைவன் திருவடிக்கீழ் அமைந்து கிடக்கும். எனவே, நெஞ்சினகமே உயிர் நிலையென்று உணரற்பாற்று. இவ்வுண்மை, இஞ்ஞான்றை உடம்பு நூலார் சில சிற்றுயிர்களின் மண்டையோட்டைக் கழற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/59&oldid=1589205" இலிருந்து மீள்விக்கப்பட்டது