உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளையை

திருவாசக விரிவுரை

அகற்றிப் பார்த்தபோது அவை அ

27

சிலநாள்

உயிரோடிருந்தமையும், தலையின் உள்ளுறுப்புக்கள் செவ்வனே யிருந்தும் நெஞ்சின் தாமரைப் பையை அகற்றிக்கால் அவை அப்போதே உயிர் துறந்தமையும் கண்டு உயிர் நிற்றற்கிடமாவது நெஞ்சப்பை ஒன்றுமே என முடிபுகட்டியிருக்குமாற்றால் நன்கு தெளியப்படும்’

கோகழிஆண்ட குருமணிதன் தாள்வாழ்க - திருப்பெருந் துறையில் எழுந்தருளி அடியேனை ஆட்கொண்டருளிய குரு நாதனான மாணிக்கமணியின் திருவடி வாழ்க.

‘சிவபுராணம்' என்னும் இவ்வருமைக் கலிவெண்பாட்டை அடிகள் திருப்பெருந்துறையில் அருளிச்செய்தாராகலின், அதற்கேற்பத் திருபெருந்துறையிற் குருந்தமர நீழலிற் குரு வடிவந்தாங்கி எழுந்தருளித் தம்மை அடிமை கொண்டருளிய சிவபிரான் அருட்டிறம் தமதுளத்து ஏனை எல்லா நினைவு களையும் அடிப்படுத்து மிக்கெழுந்து நிற்குமாறு பற்றி அதனை ஈண்டுத் தொடக்கத்திலேயே எடுத்துரைப்பாராயினர்.

கோகழி - பெருந்துறை; கோ - தலைமை: பெருமை, கழி துறை, ‘கோகழி' என்பது ‘பெருந்துறை' என்று இங்ஙனம் பொருள்படுதலை அறியாதார் இதற்குத் 'திருவாடுதுறை' எனப் பொருளுரைப்பர். திருவாதவூரடிகட்கு இறைவன் வடிவிற்போந்து அருள்புரிந்து திருப்பெருந்துறையிலேயாம் என்பதனை அடிகளே அருட்பத்தில்

“திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையிற்

செழுமலர்க் குருந்தமே வியசீர்

இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்

டென்னுடை எம்பிரான் என்றென்

றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்

அலைகட லதனுளே நின்று

பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்

போதராய் என்றரு ளாயே'

குரு

என்று அருளிச் செய்தலானும், அடிகள் வரலாற்றினைக்

கூறும் புராணங்களும்

அங்ஙனமே உரைத்தலானும்,

திருவாவடுதுறையில் அதுபோற் குருவடிவிற்போந்து இறைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/60&oldid=1589206" இலிருந்து மீள்விக்கப்பட்டது