உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

  • மறைமலையம் 25

அவரை ஆண்டருளினான் என்பது யாண்டுங் கூறப்படா மையானும் அங்ஙனம் பொருளுரைத்தல் பொருந்தாதென்க. தெய்வச் சிறப்பு வாய்ந்த தீர்த்தமாகக் கொண்டப்படும் ஒரு பொய்கை தன்கண் உளதாதல்பற்றியே அவ்விடம் ‘பெருந்துறை’ என வழங்கப்படலாயிற்றென்பதற்குத்

6

“திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்தம்மே வியசீர் அருத்தனே

என்று அடிகள் ஓதுமாற்றால் இனிது விளங்கலானும், க்காரணம் ‘கோகழி’ என்னும் பெயரானும் எளிதிற் புலப் படுதலானும் இதற்கு இவ்வாறு பொருளுரைத்தலே பொருத்த மாமென்று துணிக.

குரு -ஞானாசிரியன். 'மணி' ஈண்டு 'மாணிக்கமணி'; இறைவன் திருமேனியின்நிறம் சிவப்பாதன் “சிவனெனு நாமந் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” என்று திருநாவுக் கரசடிகளும் அருளிச் செய்தமை பற்றி உணர்ந்துகொள்க. எல்லா மணியினும் மாணிக்கமணி சிறந்தமையானும் அவற்றை இயைத்துக் 'குருமணி’ என்று உருவகப்படுத்தினார். மேலும், மாணிக்கமணி தனக்கு இயற்கையாய் உள்ள அழகிய வொளி யால் இருளை நீக்கி விளக்கத்தினைச் செய்தல்போல இவ்வாசிரி யனும் தனக்கியல்பான அருளொளியால் உயிரைப் பற்றிய அறியாமையை நீக்கி அதனை விளங்கச் செய்வ னென்பதூஉம் இவ்வொப்புமையால் அறியற்பாலதாம்.

'மணி' கழுவுதல் எனப் பொருள்படும். 'மண்' என்னும் முதனிலையிற்றோன்றிய தமிழ்ச்சொல்; கழுவுதலாவது சானைக் கல்லிற் றேய்த்து மாசுபோக்கித் தூய்மை செய்தல்.

-

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க ஆகமப் பொருளாகி நின்று அணுகி அருள்புரிவானது திருவடி வாழ்க.

6

ஆகமம்' என்னுஞ் சொல் அடிகள் காலத்திற்கு மிக முற்பட்ட பழைய தமிழ் நூல்களினாதல், ஈச கேன கடப் பிரசிநமுண்டக மாண்டூக்கிய தைத்திரீய சாந்தோக்கிய ஐதரேய கௗஷீதகி பிருகதாரணியக சுவேதாசுவதரம் என்னும் பன்னிரு பழைய உபநிடதங்களினாதல், இவ்வுபநிடதங்கட்கும் மிக முற்பட்ட இருக்கு எசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/61&oldid=1589207" இலிருந்து மீள்விக்கப்பட்டது