உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

29

வேதங்களினாதல், சாங்கியம் யோகம் வைசேடிகம் நையாயிகம் மீமாஞ்சை வேதாந்தம் என்னும் ஆறு தரிசனங்களினாதல் வழங்கப்படுதலைக் கண்டிலம். அதனால், இச்சொல்லால் உணர்த்தப்படும் பழைய நூல்கள் எவையென்பதும், அவை எத்துணையென்பதும், அடிகள் காலத்து அப்பெயர்களால் உலவினவை எவை என்பதும் இஞ்ஞான்று விளங்கா; ஆயினும், 'ஆகமம்' என்பது வடசொல்; இச்சொல்லின் முதல்நின்ற ஆ என்னும் இடைச்சொல் (உபசர்க்கம்) அண்மைப்பொருளை உணர்த்தும்; கம் என்னும் வினைமுதனிலை (தாது) போதல், போய்ச்சேர்தல் என்னும் பொருளைத் தரும்; ஆகவே, இச் சொல்லின் திரண்டபொருள் ‘அணுகுதல்' என்பதேயாம். ஆகமம் முடிந்தபொருளை உணர்த்தலின், அதனைத் துறை போகக் கற்று அதன்வழி நிற்பார்க்கு இறைவன் அணுக்கராய் நின்று அருள் புரிவாரென்பமு இச்சொற்பொருளாற்பெற்றாம். இதுவே இச்சொல்லுக்கு அடிகள்கொண்ட பொருளென்பது அதனை அடுத்துக்கூறிய ‘அண்ணிப்பான்' என்னும் மொழியாற் பெறப்படும். அண்ணிப்பான் - அணுகி நிற்பவன். பண்டைக் காலத்தே ஆகமம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில் வழங்கிய நூல்கள் முடிந்த ஞானத்தினையே வகுத்துக்கூறின வென்ப தற்குப் பிங்கலந்தை நிகண்டிற்போந்த “ஆகமம் என்னுஞ் சூத்திரமே சான்றாம்.

ஞானம்’

6

இனிப் பிங்கலந்தைக்கு முற்பட்ட திவாகரத்தின்கண் கமம் என்னுஞ்சொற் பொதுவான நூலையுணர்த்தும் பெயர்களுள் ஒன்றாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கின்ற தேயல்லாமல் ஞானத்தை அறிவுறுத்தும் நூற்குச் சிறப்புப் பெயராகக் கூறப்பட்டிலது. அதனால், திவாகரம் எழுதப்பட்ட காலத்தில் ஆகமம் என்னும் ஞான நூல்தோன்றி வழங்கவில்லை யென்பதூஉம், அதற்குப்பிற்றோன்றி பிங்கலந்தையின் காலத்தி லேதான் அப்பெயர் பெற்ற அறிவுநூல்கள் சில தோன்றி நடை பெறலாயின வென்பதூஉம் பெறப்படும். “ஆகமத்தொன்றும் நரகும் இரௌரவம்” என்று காணப்படும் பிங்கலந்தைச் சூத்திரத்தால் ஆகமங்கள் சில அக்காலத்திருந்தனவென்றும், அவற்றுள் ஒன்று இரௌரவம் எனப் பெயர் பெற்றதென்றும் உணர்ந்துகொள்க. நான்கு வேதங்களையும், ஆறு அங்கங் களையும் பதினெண் புராணங்களையும், பதினெண் உப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/62&oldid=1589209" இலிருந்து மீள்விக்கப்பட்டது