உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் 25

புராணங்களையும், பதினெட்டுத் தரும நூல்களையும் பெய ரெடுத்தோதி அவற்றின் தொகைகளையுங்கூறிப்போந்த திவாகரத்தின்கண் ஆகமம் என்னுஞ்சொல் ஞான நூல்கட்குச் சிறப்புப்பெயராகக் காணப்படாததோடு அவற்றின் பெயராதல் தாகையாதல் ஒரு சிறிதுங் குறிக்கப்படாமையானும், ஆகமம் என்னுஞ் சொல்லை அறிவு நூல்கட்குச் சிறப்புப்பெயராக எடுத்துரைத்து இரௌரவம் எனும் ஓர் ஆகப்பெயரையுங் குறித்துப்போந்த பிங்கலந்தையும் வேதம் வேதாங்கம் புராணம் உபபுராணம் தருமநூல் என்பவற்றின் பெயரையுந் தொகை யையும் விளங்கக்கூறினாற் போல வழங்கிய காலத்தில் ஆகம நூல் தோன்றவில்லையெனவும், பிங்கலந்தை வழங்கிய காலத் திலும் ஒரு சிலவே எழுதப்பட்டு வழங்கினவெனவும் கடைப் பிடித்துணர்ந்து கொள்க.

இன்னும் மேலெடுத்துக்காட்டிய பிங்கலந்தைச் சூத்திரத் தால் ஆகமப் பெயர் வாய்ந்த சில நூல்கள் ஞானப்பகுதி யொன்றனையே உணர்த்தின பரிசு தெற்றெனப்புலப்படுதலால், அக்காலத்திற் கன்மங்களைக் கூறும் பகுதிகள் அவற்றின்கண் ருந்தில வென்பதும், அவை பிற்காலத்தவராற் காலங் கடோறும் எழுதிச் சேர்க்கப்பட்டனவென்பதும் தெளியப்படும். அதுவேயுமன்றி கன்மப்பகுதிகளே பெரும்பான்மையாய் விரிந்து கிடக்கும் இஞ்ஞான்றை ஆகமங்களும், அவை இருபத்தெட்டு என்னுந் தொகையும் பண்டைநாளில் இருந்தில வென்பதுந் தேற்றமாம்.

அற்றேல், திருமந்திரப் பாயிரத்தின்கண் “அஞ்சன மேனி" எனப்போந்த செய்யுளில் ஆகமங்கள் இருபத்தெட்டு எனுந் தாகையும், “பெற்றநல் லாகமங் காரணங் காமிக, முற்ற நல்வீர முயர்சிந்தம் வாதுளம், மற்றவ வியாமள மாகுங்கா லோத்தரந், துற்றநற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே" என்னுஞ் செய்யுளால் அவற்றுட் சிலவற்றின் பெயரும் எடுத்தோதப்பட்டனவா வனின்; ஆசிரியர் சேக்கிழார் சேக்கிழார் தாம் தாம் அருளிச்செய்த திருத்தொண்டர் புராணத்தில் திருமூலநாயனார் வரலாறு கூறி அவர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர வரலாறு உரைக் கின்றுழி “முன்னியவப் பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ் சாத்தி” என அது மூவாயிரஞ் செய்யுட்கள் உடையதென அதன்செய்யுட்டொகை குறித்தருளினார். திருமந்திரப் புத்தகங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/63&oldid=1589210" இலிருந்து மீள்விக்கப்பட்டது