உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

31

களின் முதலிலும் ஈற்றிலும் உள்ள “மூலன் உரைசெய்த மூவாயிரந்தமிழ்” என்னுஞ் செய்யுட்களாலும் திருமூல நாயனார் அருளிச்செய்தவை மூவாயிரஞ் செய்யுட்களே யென்பது துணியப்படும். அஃதங்ஙனமாக இஞ்ஞான்று அச்சிடப்பட்டு லவுந் திருமந்திரப் புத்தகங்களில் மூவாயிரத்துக்கு மேல் நாற்பத்தேழு செய்யுட்கள் மிகுதியாய்க் காணப் படுகின்றன.

பிற்காலத்தவர் பண்டை நூல்களின் முதலில் உள்ள பாயிரத்தினும் நூன்முடிவினும் தாம் ஒரு கொள்கையை நாட்டல்வேண்டிச் செய்த செய்யுட்களைக் கொணர்ந்து கோத்து விட்டு விட்டு நடாத்தல் உண்டாதலின் திருமந்திரச் செய்யுட்கள் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நாற்பத்தேழு செய்யுட்களிற் பல இந்நூற் சிறப்புப் பாயிரத்தின்கட் பிறரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவாமென்று அறிதல்வேண்டும். திருமூலநாயனார் வேதாகமப்பொருணிலை களைத் திருமந்திர எட்டாந் தந்திரத்தில் ஐந்தாவதாய் நின்ற ஆறந்தம் உரைக்கும் வழி “வேதத்தினந்தமும் மிக்க சித்தாந்தமும்” என்னுஞ் முப்பத்தைந்து பாக்களால் இனிது

செய்யுடொட்டு

னவா

விளக்கிப்போதலின், நூல்முதல் நின்ற பாயிரத்தின்கண் ‘வேதச்சிறப்பு' ‘ஆகமச் சிறப்பு' என மீட்டும் அவற்றைக் கூறுதல் 'கூறியது கூறல்’ ‘மிகைபடக் கூறல்' என்னுங் குற்றங்கட்கிடனா மாதலால், இவற்றைக்கூறும் பதினாறு செய்யுட்களும் பிற்காலத்தவரால் எழுதிப் பாயிரத்தின்கட் சேர்க்கப்பட்ட மென்பது திண்ணம். ஆதலால், ஆகமங்கள் இருபத்தெட்டு என்னுந்தொகையும், அவற்றுட் சிலவற்றின் பெயருந் திருமந்திரச் சிறப்புப் பாயிரத்தின்கட் காணப்படுதல் கொண்டு அவை பண்டைக்காலத்தனவென்று கோடல் ஒருவாற்றானும்

பாருந்தாது. அவை பண்டைக்காலத்திருந்தன வாயின் திவாகரம் முதலான தொன்னூலுரைகளில் ஒரு சிறிதும் காணப்படாமை என்னையென மறுக்க.

அற்றாயினும், திருமந்திர எட்டாந்தந்திரத்துட் போந்த "வேதமோடாகமம் மெய்யாம் இறைவனூல்’ என்னுஞ் செய்யுளால் ஆகமம் தொன்றுதொட்டதென்பது பெறப்படுமா லெனின்; திருவாதவூரடிகள் காலத்திற்குச் சிறிது முற்பட்ட காலத்தே ‘ஆகமம்' எனப் பெயரிய ஞானநூல் உண்டென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/64&oldid=1589212" இலிருந்து மீள்விக்கப்பட்டது