உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

  • மறைமலையம் 25

மட்டும் நமக்கு உடன்பாடாமன்றி அவர்க்கு மிகமுற்பட்ட பண்டைநாளிலும் அஃதுண்டென்பது நமக்கு உடன்பாடன்மை யானும், திருவாதவூரடிகள் காலத்திற்குச் சிறிது பின்னிருந்த வராகக் காணப்படும் திருமூலநாயனார் அருளிய திருமந்திரத் தின்கண் அவ்வாகமம் என்னுஞ் சொற் காணப்படுதல்பற்றி அது மிகப் பழமையதென்பது பெறப்படாமையானும் அங்ஙனம் கூறுதல் பொருந்தாதென்க.

இவ்வாறு ஆகமம் வடமொழி நான்மறையை நோக்கக் காலத்தால் மிகப் பிற்பட்டதேயாயினும், அதுதான் அறிவுறுக்கும் ஞானப்பொருண்மாட்சியால் அதனிலுங்கழி பெருஞ்சிறப்புடைத்தாம். என்னை? வேதம் சிவத்தினுங் கீழ்ப்பட்ட பல தெய்வ வழிபாட்டினை மிக்கெடுத்தோதிச் சிவ வழிபாட்டினை ஒரோவிடத்து அரிதாய்க்கூற, ஆகமம் முழுமுதற்கடவுளான சிவத்திற்கு வழிபாடு ஆற்றும் முறை ஒன்றனையே யாண்டும் சிறந்தெடுத்து விளம்புதலானும், பதி பசு பாசங்களின் இயல்பும் அத்துவித இயைபும் கட்டுவீடென்னும் இவற்றின் இலக்கணங்களும் வேதங்களில் இலைமறைகாய் போல் வெளிப்படையாகவன்றி மறைவாய்ச் சுருங்கிப் பல விடங்களிற் பலவாறாய்ச் சிதறிக்கிடத்தல் போலாது ஆகமங் களில் அவை முற்றுந் தொடர்புபட வைத்துச் செவ்வனே ஆராய்ந்து தெளிவுபடுத்தப்படுதலானும் நடுநின்று காண் பார்க்கு வேதத்தினும் ஆகமமே எவ்வாற்றானுஞ் சிறப்புடைத் தாம் என்பது இனிது விளங்குமாதலின் என்க. இதுபற்றியன்றே, வேதம் பொதுவெனவும் ஆகமஞ்சிறப்பெனவும் எதிர்நிரல் நிறையாக வைத்து ஆசிரியர் திருமூலநாயனாரால்

"வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனூல்

ஓதுஞ் சிறப்பும் பொதுவுமென் றுள்ளன

நாத னுரையவை நாடி லிரண்டந்தம்

பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே”

என்னுந் திருப்பாட்டு அருளிச்செய்யப்பட்டது.

முழுமுதற்கடவுளியல்பு ஆகமத்தால் தெள்ளிதின்

உணரப்படுமாறுபோல வேதத்தால் உணரப்படாதென்னுங் கருத்து அடிகட்கு உண்மை, "வேதம் நான்கும் ஓலமிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/65&oldid=1589213" இலிருந்து மீள்விக்கப்பட்டது