உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

66

திருவாசக விரிவுரை

33

உணங்கும் நின்னை” எனவும், “மறை ஈறு அறியா மறையோனே” எனவும், “மறையில் ஈறுமுன் தொடரொணாதநீ”எனவும், ‘அப்பெருமறையில் ஈறுமுன் தொடரொணாதநீ" எனவும், “அப்பெருமறைதேடிய அரும்பொருள்" எனவும், “வேதங்கள் ஐயாவென வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே" எனவும் அவர் இந்நூலுள் ஆண்டாண்டு அருளிச்செய்யுமாற்றால் நன்கு துணியப்படும்.

இக்கருத்துப் பிற்காலத்துச் சான்றோரான அருணந்தி சிவனார்க்கும் உண்மை "மறையினால் அயனால் மாலால் மனத்தினால் வாக்கால் மற்றுங், குறைவிலா அளவினாலுங் கூறொணாதாகிநின்ற, இறைவனார்” என்றும், “அருளினால் ஆகமத்தே அறியலாம்” என்றும் அவர் சிவஞான சித்தியிற் கூறியவாற்றாற் புலப்படும். இறைவனியல்பு மறைகளாற் புலப்படாதாயின், அவற்றை அவ்விறைவன் அருளிச்செய்தான் என்றல் என்னையெனின்; நான்மறைகளினுங் காணப்படும் பதிகங்கள் ஒவ்வொன்றையும் இயற்றிய ஆசிரியன் பெயரும், அவ்வாசிரியரால் அப்பதிகங்களில் வணங்கப்படும் இந்திரன், அங்கி, மித்திரன், வருணன், மருத்துக்கள், அசுவினிகள் முதலிய தெய்வங்களின் பெயரும் அவற்றில் வெளிப்படையாய்க் காணக்கிடத்தலாலும், அப்பதிகங்களிற் சொல்லப்படும் பொருள்கள் மக்கள் தமக்கு இம்மையில் வேண்டும் ஊண் உடை செல்வம் பகைவர் தோல்வி சோமப் பூண்டின்சாறு கன்று காலிவளன் இனியவாழ்க்கை முதலியனவாகவே பெரும்பாலும் இருப்பக்காண்டுமன்றி மக்கட்குத் தெரியாமற் கடவுள் அருளால்மட்டும் அறிந்து மெய்ப்படுத்திக் கொள்ளற்பாலன வாகிய அரும்பெரும் பொருள்கள் எவையுங் காணப்படாமை யாலும், அப்பதிகங்கள் மிகப் பழையகாலத்திருந்த பண்டை மக்களால் இயற்றப்பட்டமையின் பழமையானவற்றை மிக உயர்த்துக் கூறும் மக்களியற்கைபற்றி அவை தொன்று தொட்டுப் பாராட்டப்பட்டு வருதலாலும் அவை அங்ஙனம் முகமனாகக் கடவுளால் அருளிச் செய்யப்பட்டன வென்று வழங்கி வருகின்றன.

அஞ்ஞான்றிருந்த மக்கள் தமக்கு மேலான ஒரு துணையை வேண்டி அதனை அறிய முயன்றதில், அவர் தாந்தாம் அறிந்தவாறு தமக்குச் சிறந்ததெனத் தோன்றிய ஒவ்வொன்றைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/66&oldid=1589214" இலிருந்து மீள்விக்கப்பட்டது