உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

  • மறைமலையம் - 25

தெய்வமெனத் துணிந்து அவற்றை வழுத்தும் உரையாகப் பற்பல பதிகங்கள் பற்பலராய் இயற்றினாராதலின், அந் நான் மறையின் பதிகப் பொருள்கள் ஒன்றோடொன்று மாறுபட்டுக் கிடக்கும், மற்றுப் பின்றைக்காலத்தில் அவரினும் அறிவிற் சிறந்தாராய்த் தோன்றிய ஆசிரியர் வேதநூற்பதிகங்கள் இயற்றிய தொல் லோரின் கருத்துக்களைப் புடைபடவைத்து முற்ற ஆராய்ந்து கொள்ளற் பாலன அல்லாதவற்றைக் கழித்துக் கொள்ளற் பாலனவற்றையுந் தெளிவுபடுத்திப் பொருந்துவன பலகூட்டி விரித்து முடிவுகண்டு ஆகமநூல் இயற்றினார். வேதநூல் மிகப்பழையதாதல்பற்றி முதல்வன் அருளியதெனவும், ஆகம நூல் இம்மை மறுமைக்குரிய முடிந்தபொருள்களை உண்மை யான் ஆராயந்து உறுதிபயக்கும் அறிவுநூலாதல்பற்றி அதுவும் இறைவனருளியதெனவும் முகமனுரையாய்ச் சான்றோர் அவற்றை உயர்த்து வழங்குவாராயினர். வேதநூல் ஆகமநூல் வந்த வரலாறு இத்துணையே. இவ்வாற்றால், வேதநூலிற் புலப்படாத முதல்வனியல்பு ஆகம நூலாற் புலங்கொள விளங்குதலும், அதுபற்றியே அடிகள் 'ஆகமமாகி நின்று அண்ணிப்பான்' என்று அருளிச் செய்தமையுங் கண்டுகொள்க. வேதாகம வரலாறு இவ்வாறன்றி வேறு வேறு கூறுதல் உண்மைக்குமாறாய்ப் பொருந்தாதாமென்க.

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க - ஒருவனாயிருந்தே பல உருவங்களை உடையோனாய் எப்பொருளிலுந் தங்கு வோனது திருவடி வாழ்க.

எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் முதல்வனாயிருக்கும் முழுமுதற்கடவுள் ஒன்றேயென்பது எல்லா நூலார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் ஒத்ததுணிபாதலின் ஈண்டு ‘ஏகன்’ என்றார். க்கருத்தேபற்றி ஆசிரியர் திருமூலநாயனாரும்

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே”

என்று அருளிச் செய்தனர். தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/67&oldid=1589217" இலிருந்து மீள்விக்கப்பட்டது