உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருவாசக விரிவுரை

அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு"

என்று அருளினமை காண்க.

35

அற்றேல், இறைவன் ஒருவனே என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின் அவனை ஈண்டு ஒன்றென்று கூறுதலாற் போந்த பயன் என்னையெனின்; எழுநிலை மாடம் தேர்முதலான வடிவுகள் பலராற்கூடி யமைக்கப்படுதல்போல, அவற்றினும் பன்மடங்கு பெரியவாய் வியக்கப்படும் அமைப்புடையவான இவ்வெண்ணிறந்த உலகங்களையுந் தோற்றுவித்தற்கு எண்ணிறந்த கடவுளர் வேண்டப்படுவரென அநேகேசுர வாதிகள் கூறுவது பொருந்தாமை காட்டுதற்பொருட்டு ‘ஏகன்’ என்று வற்புறுத்துரைக்க வேண்டுவதாயிற்று. எழுநிலை மாடம் முதலியன அமைக்கின்றுழியும் அவற்றை அமைப்பார் பலரையுந் தத்தந் தொழில்களின் ஏவி அவை தம்மை முடிப்பித்து அவரெல்லார்க்கும் மேலாய்நிற்கும் ஒரு தலைவன் ன்றி யமையாது வேண்டப்படுமாறுபோல, வியப்புடைய இவ்வெண் ணிறந்த உலகங்களையும் இவ்வுலகங்களுட்பட்ட எண்ணிறந்த உடம்புகளையும் தானே செய்தும் தத்துவங்களின் நின்ற கடவுளரை ஏவிச் செய்வித்தும் இவர்க்கெல்லாம் மேலான தலைவனாய் விளங்கும் முதல்வள் ஒருவனே என்பது காட்டுவார் ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனாரும்,

“ஒன்றலா ஒன்றால் உளதாகி நின்றவா(று) ஒன்றலா ஒன்றில்அவை ஈறாதல் - ஒன்றலா ஈறே முதல்அதனின் ஈறலா ஒன்றுபல வாறே தொழும்பாகும் அங்கு

என்று அருளிச் செய்வாராயினர்.

66

.

இங்ஙனம் கடவுள் ஒருவனே என்று வற்புறுத்துரைக்க வேண்டும் இன்றியமையாமை கண்டே “அழியும் பொருளையும் உயிரையும் ஆள்பவனான தேவன் ஒருவனே என்றும், எஞ்ஞான்று இருள் இருக்கப் பகலும் இல்லாதாய் இரவு மில்லாதாய்ச் சத்துமில்லாதாய் அசத்துமில்லாதாய் இருந்த தோ, அஞ்ஞான்று சிவன் ஒருவரே இருந்தார்” என்றும் சுவேதா சுவதரத்தும், “அப்போது அசத்துமில்லை, சத்துமில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/68&oldid=1589219" இலிருந்து மீள்விக்கப்பட்டது