உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

  • மறைமலையம் - 25

அஃதொன்று இருந்தது” என்று இருக்கு வேதத்தும், “இவ்வுலகங் களைத் தமது மேலான திருவருட்சத்தியினால் ஆளுகின்ற உருத்திரர் ஒருவரே” என்று அதர்வசிரசினும், “எவர் ஒருவரோ அவர் உருத்திரர் என்றுரைக்கப்படுவர்” என்று தைத்திரிய ஆரணியகத்தும், “ஏனையெல்லாரையும் விடுத்துச் சிவன் ஒருவரே வழிபடற் பாலார்” என்று அதர்வசிகையினும் அது நன்கெடுத்து உரைக்கப்பட்டது.

இனி ‘அனேகன்' என்பது அங்ஙனம் ஒருவனேயென்று வலியுறுத்து உரைக்கப்பட்ட முழுமுதற்கடவுள் பல்வகைச் சமயத்தார்க்கும் அவரவர் நினைந்த வடிவிற்றோன்றி அருள் புரிதற்பொருட்டும், சைவசமயத்தும், தம்மைப் பல்வகை உருவில் வைத்து வழிபடும் அன்பர்க்கு அவரவர் கருதிய வடிவிற் போந்து தம் திருவடிப்பேறு வழங்குதற் பொருட்டும் மேற் கொள்ளும் பல்வேறு உருவினனாதலை உணர்த்துகின்றது. ஒருவன் பல்வேறுருவினை எடுப்பனாயின் அவை தம்மால் அவன் வேறுபடுத்தப்பட்டுக் கடவுள் என்றும் ஒரே தன்மையன் என்னும் இலக்கணத்தோடு முரணுமாலோ வெனின்; அற்றன்று, கடவுள் எடுக்கும் உருவுகள் பிறராற் படைக்கப்படுதல் இன்றி அவனருளில் அவன் வேண்டியவாறு தோன்றவனவாதலால் அவைபற்றி அவன் வேறுபாடுறுதல் ஒரு சிறிதும் இல்லை. நாடக அரங்கு புகுந்து பல கோலம் பூண்டு ஆடுவோன் அக்கோலங் களாற் றன்னியல்பு சிறிதும் மாறாது தான் அவற்றின் வேறா யினாற்போல இறைவனும் அன்பின்மிக்க அடியார்க்கு அருள் செய்தற் பொருட்டு அவர் அவர் நினைந்த உருவுகள் பலவும் எடுப்பானாயினும் அவற்றாற் றன்னியல்பு சிறிதும் பிறழப் பெறுவான் அல்லன்; அஃது,

“ஒருவனே இராவணாதி பாவக முற்றாற் போலத் தருவன்இவ் வுருவமெல்லாந் தன்மையுந் திரியானாகும் வரும்படி வெல்லாஞ்சத்தி சத்திதான் மரமுங்காழ்ப்பும் இருமையும் போலமன்னிச் சிவத்தினோ டியைந்துநிற்கும்"

என்னுஞ் சிவஞான சித்தித் திருச் செய்யுளிற் காண்க.

இதற்கு இவ்வாறன்றி ஏகான்மவாதங் கூறுவார் கோட் பாடு பற்றி இறைவனையன்றி வேறு பல பொருள்களும் உயிர்களும் உளவெனக் கொள்ளின் அஃதவன் நிறைவிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/69&oldid=1589221" இலிருந்து மீள்விக்கப்பட்டது