உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

  • மறைமலையம் 25

யிலா ஞானமாகும்” என்னுஞ் சிவஞான சித்தித் திருப்பாட்டி னால் இனிது உணரப்படும். ஈண்டு இன்னும் இதனை விரிப்பிற் பெருகும்; மேலும் இதனை விரித்தற் கியைந்த இடம் நேரும் வழி விரிப்பாம்.

இறைவன் - 'எப்பொருளினும் தங்குகின்றவன்' என்று பொருளுரைப்பர் அடியார்க்கு நல்லார் (சிலப்பதிகாரம் நடுகாண் காதை 184 ஆம் அடி) ‘இறுத்தல்' தங்குதல் என்னும் பொருட்டாதல் "மல்லன்மூதூர் மாலைவந்திறுத் தென என்பதனுள்ளுங் காண்க. (சிலப்பதிகாரம் அந்திமாலைச் சிறப்புச் செய்காதை 20)

""

இதுகாறும் உரை கூறப்பட்ட சிவபுராணம் முதல் ஆறு அடிகளுள் முதலடியிற் சிவம் மிக நுண்ணிய விந்து நாத தத்துவங்களில் உலகிற்கு நிமித்த காரணமாய்நின்று விளங்கு மாறும், இரண்டாம் அடியில் உயிர்களின் அறிவு விளக்கத் திற்குக் கருவியாய்த் தரப்பட்ட உடம்பினகத்தே நெஞ்சத் தாமரையினுள் அஃது உயிரோடு உடனாய் நின்று அவ்வியி ரையும் உடம்பையும் ஒருங்கே இயக்குமாறும், மூன்றாம் அடி யில் அங்ஙனம் அகத்தே நிற்கும் முதல்வன் புறத்தேயுள்ள கண் முதலான கருவிகளால் அறிவுகூடப் பெற்றுவரும் அவ்வுயிர் கட்குப் புறத்தேயும், நான்காம் அடியில் புறக்கருவியாற் கண்டு அகக் கருவியாகிய அறிவினால் ஆராய்ந்து உணரப்படும்அறிவு நூலுணர்ச்சி கொண்டு அச்சிவம் எளிதின் அறியப்படுமாறும், ஆறாம் அடியில் அங்ஙனம் அறியப்படும் சிவம் எல்லா வுலகுக்கும் ஒருமுழுமுதலேயாய் நிற்பினும் அதன்பால் அன்பு மீதூரப் பெற்றார்க்கு அஃது அவர் நினைந்த வடிவிற்றோன்றி அருள்செய்து எப்பொருளினுந் தங்குந் தன் உண்மைத் தன்மையில் வழாதாய் வயங்குமாறும் அடைவு படுத்து ஓதப்பட்டமை கண்டு கொள்க.

வேகங் கெடுத்துஆண்ட வேந்தன்அடி வெல்க

பிறப்புஅறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

10 சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/71&oldid=1589226" இலிருந்து மீள்விக்கப்பட்டது