உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

41

'சீர்' என்பது புகழ் அழகு செல்வம் சீர்மை என்னும் பல பொருள் ஒரு சொல்லாகலின் ‘சீரோன்' புகழ் அழகு செல்வம் சீர்மை என்னும் நான்கும் ஒருங்குடையோன் என்க; “ஒண்புகழ் அழகு செல்வம் சீர்மை சீரென்றாகும்” என்பது திவாகரம்.

ரு

மனவேகந் தவிர்ந்தாலன்றி இறைவனுக்கு அடிமையாதல் செல்லாமையின் அதனை இவ்வைந்தில் முதல்நின்ற அடியினும், இங்ஙனம் அடிமையாயினார்க்குப் பிறவிவேரறுதல் ஒரு தலையாதலின் அதனை இரண்டாம் அடியினும், இவ்வாறு இவைறன் மாட்டு அன்பராயினார்க்கு அல்லாமல் ஏனை யோர்க்கு முதல்வன் சேயனாய் நிற்பனென்பது மூன்றாம் அடியினும், கைகூப்பித் தொழுவார்க்கு அங்ஙனம் தொழும் பொழுதே உண்மகிழ்ச்சி நிறைதலாகிய பெரும்பயன் நான்காம் அடியினும், தலைமேல் கை கூப்பி வணங்கும் அடியாரைப் புகழ் அழகு செல்வம் சீர்மை என்னும் நான்கானும் உயரச் செய்வான் என்பது குறிப்பால் உணர்த்துவார் உடம்பொடு புணர்த்துச் ‘சீரோன்' என்று ஐந்தாம் அடியினுங் கூறியருளினார்.

15

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி

ஆராத இன்பம் அருளும்மலை போற்றி.

ஈசன் அடிபோற்றி - தலைவனது திருவடிக்கு வணக்கம்; எந்தை அடிபோற்றி -எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம், தேசன் அடிபோற்றி - ஒளிவடிவினனது திருவடிக்கு வணக்கம், சிவன் சே அடிபோற்றி - சிவபெருமானது சிவந்த திருவடிக்கு வணக்கம், நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி - அன்பரது அன்பின் கண் விளங்கிநின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம், மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி வஞ்சனை பொய் முதலியனவற்றிற்கு இடமான இம்மக்கட் பிறவியை வேரோடு அறுக்கும் அரசனது திருவடிக்கு வணக்கம்; சீர் ஆர் பெரும்துறை நம் தேவன் அடிபோற்றி - அழகு நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளிய நம் தேவனது திருவடிக்கு வணக்கம், ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி - நுகர்ந்து

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/74&oldid=1589232" இலிருந்து மீள்விக்கப்பட்டது