உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் - 25

நிரம்பாத பேரின்பத்தை ஈந்தருளும் மலையை யொப்பவனுக்கு வணக்கம் என்றவாறு.

ஈசன் என்னும் வடசொல் எப்பொருளையும் ஆள்வோன் என்னும் பொருட்டு. போற்றுதல் என்னுஞ்சொல் புகழ்தல், வணங்கல் என்னும் பொருள்களை உணர்த்தல் திவாகரம் சொல்லிற் போல இகரவிகுதிபெற்று வினைப்பெயராய் வணக்கம் எனப் பொருள்பட்டது; நமஸ் சிவாய என்னும் மந்திரத்தின்கண் உள்ள நமஸ் என்னும் வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் போற்றி என்பதேயாகும்; போற்றி என்னும் ஈறுபெற்று இவ்வைந்தடிகளில் நின்ற சொற்றொடர்களும் போற்றித் திருவகவலில் அங்ஙனமே நீளத்தொடர்ந்துவருஞ் சொற்றொடர்களும் ஒப்புயர்வில்லாச் செந்தமிழ் மந்திரங் களாம். திருக்கோயில்களிற் சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றுங் காலங்களிற்ற இச்செந்தமிழ் மந்திரங்களே கூறற்பாலனவாம். வை கூறி வழிபாடாற்றின் இவற்றை ஓதுவார்க்கும் அருகிருந்து கேட்பார்க்கும் சிவபெருமான் மாட்டு மெய்யன்பு நிகழும். இவற்றை விடுத்து, ஓதுவார்க்குங் கேட்பார்க்கும் பெரும்பாலும் பொருடெரியாத வடசொற்றொடர்களை மந்திரங்களாக்கிப் புகலுதல் கரும்பிருக்க அதனை விடுத்து வேம்பு நுகர்ந்து எய்த்தலோடு ஒக்கும். செந்தமிழ் மொழியில் பண்டைக் காலந்தொட்டே இங்ஙனம் மந்திர மொழிகள் உண்மையினை ஆய்ந்தறியமாட்டாத சைவரில் ஒரு சாரார் தமிழில் மந்திரங்கள் இல்லை யெனவுஞ் செருக்கிக் கூறுவர்.

தேசன் என்பது ஒளி எனப் பொருள்படும் தேஜஸ் என்னும் வடமொழியிற் பிறந்தசொல்; கடவுள் அருளொளியுருவினன் ஆகலின் இங்ஙனங் கூறினார்.

'மாயம்' வஞ்சனை பொய் யென்னும் பொருள்களைத் தருதல் திவாகரத்தாற் பெறப்படுதலின், அவற்றிற்கு இடமாவது மக்கட்பிறவி ஒன்றேயாதல்பற்றி ஈண்டுப் பிறவி மக்கட் பிறவியென் றுரைக்கப்பட்டது; மக்கட்பிறவி யெடுத்தா ரெல்லாரும் வஞ்சனையும் பொய்யும் உடையராயிருத்தல் எவரும் தோற்றமாட்டாய்ப் போவதே பொய் யென்று பொருள் கொண்டு, 'வெறும் பொய்யாகிய பிறவி' என்று கூறுவாரு முளர்; வெறுந்தோற்றமாயுள்ள பிறவி துன்பத்தைத் தருதலும் அதனை ஒருவர் நீக்குதலும் ஆகாமையினாலும், இப்பிறவியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/75&oldid=1589235" இலிருந்து மீள்விக்கப்பட்டது