உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

43

நிகழும் நிகழ்ச்சிகள் அத்துணையும் எல்லார்க்கும் மெய்நிகழ்ச்சி களாகவே யிருப்பக்காண்டுமன்றி வேறின்மையானும் அங்ஙனங் கூறுவது அடா தென்றொழிக.

திருப்பெருந்துறையில் எழுந்தருளித் தம்மை யாட் ஐயனுருவத்தைக்

கொண்

‘நந்தேவன்' என்றார்.

குறிப்பிடுகின்றாராகலின்

உலகத்தின்கட் டுய்க்கும் இன்பங்களெல்லாம் நுகர்ந்த அளவானே நிறைவினைத் தந்து வெறுப்பினைத் தராநிற்கும்; மற்று முதல்வன் அருளாற் பெறும் ன்பமோ என்றுந் தெவிட்டா இயல்பிற்றால் இருத்தல்பற்றி ‘ஆராத இன்பம்' என்றார்.

ன்பத்தை என்றும் வற்றாது ஒழுகும் அருவி நீராகவும், அஃது அங்ஙனம் அறாது சுரந்தொழுகச்செய்து அதற்கு டமாய் நிற்கும் இறைவனை மலையாகவும் உருவகஞ்செய்தல் அடிகள் கருத்து; இஃது ஏகதேச உருவகம்.

20

சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவன்அரு ளாலே அவன்றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான்

சிவன் அவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் சிவபிரானாகிய அவன் என் நினைவினுள்ளே நிலைபெற இருந்த அவ்வியல்பினால், அவன் அருளாலே - அவனது திருவருளாலே, அவன் தாள் வணங்கி - அவனுடைய திருவடிகளை வணங்கி, சிந்தை மகிழ உள்ளம் மகிழ, சிவபுராணம் தன்னை - சிவனது பழைய முறைமையினை, முந்தை வினைமுழுவதும் ஓய - முற் செய்த ஊழ்வினை முற்றுந் தேய்ந்து போக, யான் உரைப்பன் - யான் சொல்லுவேன் என்றவாறு.

-

‘சிவன் அவன்' என்னும் இரு சொல்லில் அவன் என்பது முழுமுதற் கடவுளைச் சுட்டும் பெயரளவாய் நின்றது. ஒன்றோடொன்று ஒவ்வாச் சமயத்தினரெல்லாரும் முழுமுதற் கடவுளைச் சுட்டுமிடத்துப் பொதுப்பட ‘அவன்' என்று வழங்குதலின் அப்பொதுப்பெயரைப் பின்னும், அன்புருவாய் விளங்கும் அம்முதல்வனியல்பைச் சிறந்தெடுத்து வழங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/76&oldid=1589237" இலிருந்து மீள்விக்கப்பட்டது