உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

  • மறைமலையம் - 25

சைவசமயத்திற்கே உரிய 'சிவன்' என்னுஞ் சிறப்புப் பெயரை அதன் முன்னும் வைத்துக் கூறினார்.

றைவன் தம் நினைவினுள் நினைவாய் முனைத்து விளங்கும் முறைமையினை இடை டைவிடாது கண்டுகொண்டி ருக்கும் அடியார்கள் அக்காட்சியினை விட்டு வேறொன்றைக் காண்டலும் வேறொன்றைச் செய்தலும் மாட்டாராகலின், அவர் அவனருள் ஏவுமாறு நின்றே ஒன்றனைச் செய்ய மாட்டுவார்; அதனால் அவன் திருவடியை வணங்குஞ் செயலும் அவர்க்கு அவனருள் ஏவுமாறு பற்றியே நிகழப்பெறு மென்பது பற்றி ‘அவனருளாலே அவன்றாள் வணங்கி' என்றார். இவ் வுண்மை சிவஞான சித்தியாரிலும்,

“எவ்விடத்தும் இறையடியை யின்றியமைந் தொன்றை யறிந்தியற்றி யிடாவுயிர்கள் ஈசன் றானுஞ் செவ்விதின் உளம்புகுந்து செய்தியெலாம் உணர்ந்து சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன் இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா இவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாற் நிற்கும் இவ்வுயிர்போல் நின்றிடுவன் ஆத லால்நாம் அரனடியை அகன்றுநிற்ப தெங்கே யாமே”

என்று நன்கெடுத்து விளக்கப்பட்டது.

சிவபிரானது பழைய முறையினை நினைந்து அதனை உரைப்பார்க்கு அவர் முற்பிறவிகளிற் றொகுத்த ஊழ்வினைப் பொதி வரவரக் குறைந்து இல்லையாய்ப் போதலின் 'சிவ புராணந் தன்னை, முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன்’ என்றார். முற்செய்த ஊழ்வினை நினைவைப் பற்றிக்கொண்டு அதன் வாயிலாகவே புறத்தே செயலினும் வெளிப்படா நிற்கும்; மற்று உயிரின் நினைவு ஊழ்வினை ஏறுதற்கு இடங்கொடாமல் சிவபிரானருள் ஏறி நிற்றற்கு இடஞ்செய்து போதருமாயின், அவ்வருளால் உந்தப்பட்டு அந்நினைவு புறத்தே ஒரு செயலினைப் புரியும் வழியும் அஃது ஊழ்வினைப் பயனான செயலினைப் புரியாமல் அருட்பயனான தொன்றனையே புரியும். இவ்வாறு உயிரின் நினைவும் செயலும் நடைபெறுங்கால் ஊழ்வினை வந்து பற்றுதற்குச் சிறிதும் வாயிலின்மையின் அதன் வலி வரவர நுணுகிப் போகும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/77&oldid=1589239" இலிருந்து மீள்விக்கப்பட்டது