உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

45

முந்தை - முன்; இப்பொருட்டாதல் “வந்தடி பொருந்தி முந்தை நிற்பின்” என்னும் புறப்பாட்டுரையிற் காண்க.*

ஒய் - நுணுக, அதாவது தன்வலிதேய என்பது; “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவியினான்கும் உள்ள தன் நுணுக்கம்” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும்.*

கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளி எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர் (யாய் 25 பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்.

-

கண்நுதலான் - நெற்றிக் கண்ணுடைய இறைவன், தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி - தனது அருட் கண்காட்ட அவன் திரு முன்பு வந்து அடைந்து, எண்ணுதற்கு எட்டா நினைவிற்கும் எட்டாத, எழில் ஆர் கழல் இறைஞ்சி எழுச்சி பொருந்திய திருவடிகளை வணங்கி, விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் - வானுலகு அளவும் நிறைந்து மண்ணுலகு அளவும் நிறைந்து இவற்றிற்கு அப்பாலுமாய் நிறைந்தவனே, விளங்கு ஒளியாய் புலப்பட்டுத் தோன்றும் ஒளிவடிவினனே, எண்ணிக்கையின் எண் இறந்து எல்லை இலாதானே அளவினையும் கடந்து வரம்பு இன்றி விரிந்தவனே, நின் பெரும் சீர் - நினது பெரும் புகழினை, பொல்லா வினையேன் - தீவினையுடையயான், புகழும் ஆறு ஒன்று அறியேன் - புகழ்ந்து உரைக்கும் வகை ஒன்றனை அறியாதவனாயிருக்கின்றேன் என்றவாறு.

-

-

நுதற்கண்ணான் என்று நிற்கற்பாலன ‘கண்ணுதலான் என மாறி நின்றன; இங்ஙனம் வருதல் “மருவின் றொகுதி மயங்கியன் மொழியும், உரியவையுளவே புணர்நிலைச்சுட்டே’ என்னுந் தொல்காப்பியப் புணரியற் சூத்திரத்தில் ‘இலக்கணத் தோடு பொருந்திய மரு' வென்று அமைக்கப்படும் என்பர் நச்சினார்க்கினியர். இறைவன் அருளையே கண்ணாக உடைய னாதலானும், அது நெற்றிக்கு நேரே புருவத்திடை வெளியி லுளதென்று அறிவு நூல்கள் நுவலுதலானும் கண்ணுதலான் என்பது அவற்குப் பெயராயிற்று. எல்லா மாந்தர்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/78&oldid=1589241" இலிருந்து மீள்விக்கப்பட்டது