உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மறைமலையம் - 25

புருவத்தின் இடையே மூளையின் அகத்தே நடுவில் இவ்வருட் கண் அமைந்திருக்கின்றனதென இக்காலத்து உடம்பு நூல் வல்லாருங் கூறுவர். ஆசிரியர் திருமூலநாயனாரும்,

66

நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி

உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்

பற்றுக்குப் பற்றாய்ப் பரம னிருந்திடஞ் சிற்றம் பலமென்று தேர்ந்துகொண் டேனே"

என்று அருளிச்செய்தமை காண்க.

மக்களிடைத் தமைந்த இவ்வருட்கண் அவரைப்பற்றிய மலமாசினால் அவர் அதனாற் பெரும்பயன் பெறுதற்கு ஆகாவாறாய் நிற்க. இயற்கையாகவே மலமாக நீங்கி விளங்கும் முதல்வன் மாட்டு இஃது என்றுந் திறந்தபடியாய்த் திகழா நிற்குமென்று உணர்ந்து கொள்க. இத்தன்மைத்தாகிய அவனது அருட்கண் காட்டமக்களிடத்தமைந்த அகக்கண்ணும் விளங்கப் பெறும். அதனாலன்றோ அடிகள் தாம் பெரியதோர் அரசச் சல்வத்தினின்றும் விடுபட்டு வந்து, குருந்த மர நீழலில் குருவடிவு கொண்டு வைகிய முதல்வன் றிருவடிகளைத் தாம் வணங்கப் பெற்ற பேற்றினை ஈண்டுக் குறிப்பிடுவராயினர்.

'எழில்' என்பதற்குப் பரிமேலழகியார் ‘எழுச்சி' என்று பொருளுரைப்பர்(திருக்குறள் 41.7). அழகு என்று பொருளுரைப்

பினுமாம்.

புல்லாகி பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

30 செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

-

புல்ஆகி - புல்லாகியும், பூடு ஆய் பல்வகைப் பூண்டு

களாகியும், புழுஆய்

-

புழுவாகியும், மரம் ஆகி - பலதிற

மரங்களாகியும், பல் விருகமாகி

பறவையாய்

-

-

பல மிருகங்களாகியும்,

பல்வகைப் பறவைகளாகியும், பாம்பு ஆகி

-

பாம்புகளாகியும், கல் ஆய் - கற்பாறைகளின் உள்ளாகியும், மனித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/79&oldid=1589244" இலிருந்து மீள்விக்கப்பட்டது