உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

  • மறைமலையம் - 25

கல் என்பது உயிர்கள் உடம்பெடுத்தற்கு முன் புலப்படாது கிடத்தற்கு இடமாயிருத்தல் பற்றி அதனையும் ஒரு பிறவிபோல் வைத்துக் கூறினார். இதற்கு இவ்வாறன்றி, மலைகள் உயி ருடையனவென்றும் அவை பறக்கும் இயல்பினவாயிருந்த மையால் அவற்றின் சிறகை அரிந்து இந்திரன் அவற்றை ஒரு நிலையிலிருக்கவைத்தன னென்றும் கூறுங் கதைபற்றி அவற்றையும் ஒரு பிறவியாக வெடுத்துக் கூறினார் என்பாரும் உளர் உயிரும் அதுபற்றிவரும் உறுப்பு வளர்ச்சியும் மலைகள் உடையனவென்பது இக்காலத்து இயற்கைப் பொருள் நூலாராய்ச்சிகளால் ஒரு சிறிதும் பெறப்படாமையின் அது கொள்ளற்பாலதன் றென்க.

மிருகம் என்னும் வடசொல் தமிழில் விருகம் எனத்

திரிந்தது.

'பேய்' நுண்ணுடம்பில் நிற்கும் ஒருவகை உயிர். இது கண்டார்க்கு அச்சத்தைத் தருதலின் அப்பெயர் பெற்றது; பேம்- அச்சம்.

‘கணம்’ இதுவும் நுண்ணுடம்பில் நிற்கும் மற்றொரு வகை உயிர்; இதனைப் பாரிடம் என்பர் தமிழ்நூலார்.

ரிந்தது.

அசுரர் - சுரர்க்குமாறான அரக்கர்; சுரர் - தேவர்.

தாவரம் - நிற்பன; ஸ்தாவரம் என்னும் வடசொற்றிரிந்தது. சங்கமம் - அசைவன; ஐங்கமம் என்னும் வடசொற்றி

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே.

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் - உண்மையாகவே உன் அழகிய திருவடிகளைக் காணப் பெற்று இன்றைக்கு வீடுபேற்றின்பத்தினை அடைந்தேன்; உய்ய - யான் பிழைக்கும் பொருட்டு, என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா - என் உண்ணத்தினுள்ளே ஓம் என்னும் பிரணவ வுருவாய் நின்ற மெய்யனே, விமலா - மாசற்றவனே, விடைப்பாகா - ஏறு ஊர்ந்தவனே, வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/81&oldid=1589249" இலிருந்து மீள்விக்கப்பட்டது