உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

திருவாசக விரிவுரை

49

நுண்ணியனே ஆரிய மறைகள் தலைவோனே என்று அழைப்பவும் மேல் உயர்ந்தும் கீழ் ஆழ்ந்தும் அவற்றிற்கு எட்டாமல் அகன்று நுண்ணியாய் இருப்பவனே என்றவாறு.

6

ஓங்காரம் என்பது எல்லா எழுத்தொலிகட்கும் முதலாய் அகத்தும் புறத்தும் இயற்கையாய் ஒலிக்கும் ஓசை; ஒருவர் தமது காதைக் கையால் அடைத்து நோக்கும் வழி அதன் அகத்தே அஃது ஓவென்று இரைதலையும் புறத்தே கடலினும் அஃது அங்ஙனமே இசைத்தலையும் காணலாம். செயற்கையாக எழும் ஏனை ஓசைகளையெல்லாம் அடக்கி, உட்குடை குடைவாக எப்பொருளைக் காதில் வைத்துக் கேட்பினும் இவ் ஓகார ஓசை இயற்கையாக ஒலித்தல் கேட்கப்படும். உலகம் எங்கணும் ஓவாது ஒலிக்கும் இவ்வோசையினால் உந்தப்பட்டே உலகங்களும் உலகத்துள்ள பல்வகை யுடம்புகளும் இயங்குகின்றன. இவ் வோசையானது படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் இயற்றவல்ல தொன்றாம் ஓசை இயங்கும் முறையாலும் இயக்கப்படும் முறையாலும் அணுக்களைக் கூட்டுதலும் கூட்டி நிலைப்பித்தலும் கூட்டியவற்றைப் பிரித்தலும் செய்துபோதருதலை இஞ்ஞான்றை இயற்கைப் பொருள் நூலார் ஆராய்ந்து விளக்கியிருத்தலின் இவ் ஓகார வொலி உலகங்களையும் உடம்புகளையுந் தோற்றுவித்தும் நிலைப்பித்தும் அழிப்பித்தும் நடைபெறுதல் மறுக்கப்படாத உண்மையாம். இவ் ஓகார வொலியைப் பகுத்துக் காணுமிடத்து அஃது அ உ ம் என்னும் மூன்றொலிகளாய்ப் பிரியும். இவற்றுள் அகாரவொலி எல்லாச் செயற்கை யொலிகட்கும் முதற்பிறந்து படைத்தற்றொழிதலைப் புரிவதாம்; உகாரவொலி அதன் பின்னே தோன்றிச் சிறிது நேரம் நிற்பதாகலின் அது படைக்கப்பட்ட பொருள்களைத் தத்தங்கால எல்லையளவும் நிலைபெறச் செய்யும்; மகாரவொலி இதழிரண்டும் பொருந்தி முடிவதாகலின் அஃது அங்ஙனம் நிலைபெற்ற பொருள்களை அழிந்து போகச் செய்யும். இவ்வாறு இம் மூன்றொலிகளையும், இம் மூன்றொலிகளாற் செய்யப்படும் முத்தொழில்களையும் அடக்கி நிற்கும் இயற்கை ஓசையாயிருத்தலின் ஓங்காரம் எவற்றினுஞ்சிறப்புடைத்தாம்.

னி, இவ் ஓகாரவொலி அசுத்தமாயையிற் பிறக்கும் ஏனை முப்பது தத்துவங்களும் போல்வதன்று. அசுத்தமாயா தத்துவங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/82&oldid=1589251" இலிருந்து மீள்விக்கப்பட்டது