உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் 25

களுள் ஒன்று மந்றொன்றாய்த் திரியும். பொன் பணியாகவும் மண் குடமாகவும் திரியுமாறுபோல ஓகாரவொலி வேறொரு பருப் பொருளாகத் திரிதலைக் கண்டிலம் ஆகலானும், அஃதெப்போதும் நுண்பொருளாய் ஏனை அசுத்தமாய தத்துவங்களைத் திரிபுபடுத்துங் காரணமேயா மென்பது பெற்றாம். அல்லதூஉம், தானொன்றாய்த் திரிவது வேறொன்றனைத் திரிபுபடுத்தும் நுண்ணிய காரணப் பொருளாய் நில்லாது; என்னை? தான் ஒன்றாய்த் திரியுங்கால் தன்னை அங்ஙனம் திரித்தற்கு மற்றொரு நுண்பொருளின் உதவியை அவாவி நிற்குமாகலின் என்க. அற்றேல், ஓகாரவொலி டைவெளியில் இயங்கக் காண்டலானும், ஓசையெல்லாம் விசும்பிற்குரிய ஒரு பண்பென்று நூல்கள் கூறுதலானும் இதனை விசும்பினின்று பிறப்பதென்று கூறுதலே பொருத்தமாமெனின்; அற்றன்று, எழுத்துக்களோடு கூடிப் பொருளை அறிவுறுக்கும் ஒலியும், எழுத்துக்களோடு விரவாமலும் பொருளை அறிவி யாமலும் நிகழும் ஒலியும் என ஓசைதான் இரு வகைத்து. அவற்றுள், எழுத்துக்களோடு விரவிப் பொருளறிவுறுக்கும் ஒலிகளே விந்து தத்துவத்திற்கு உரியன வென்றும், எழுத்துக் களோடு விரவாத வெற்றொலியே விசும்பிற்கு உரியதென்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். எழுத்துக்களோடு விரவாத ஒலிகள் யாவையோவெனின், பல்லி முற்கந் தெரிக்கும் ஒலியும் இதழை மடித்துவிடும் சீழ்க்கை யொலியும் போல்வன வெல்லாம் எழுத்தியல் நிரம்பா ஒலிகளா மென்று உணர்ந்து காள்க. எழுத்துக்களான் ஆக்கப்பட்டுப் பொருள் அறிவு றுக்கும் ஒலிகளோ விந்துமாயையிற் பிறப்பனவாமென்றும், எழுத்தோடுகூடா ஏனை ஒலிகள் அசுத்தமாயா காரியமான பூதா காயத்திற் றோன்றுவனவா மென்றும் பௌட்கராகமமும் இவற்றின் வேற்றுமையினை நன்கு தெரிந்தோதும்.

இனி, இவ்வெழுத்தொலிகள் விந்து தத்துவத்தின் கட் பிறப்பனவென்றல் யாங்ஙனம், விந்து பொறிகளுக்குப் புலனாகாத மிக நுண்ணிய பொருளன்றோ வெனின்; அற்றன்று விந்து காரியப்படாமல் வெறுமுதலாய் நிற்குங்கான்மட்டும்

நம்மனோர்க்குச் சிறிதும் புலப்படாதநிலையில் நிற்குமே யல்லாமல், அஃது உயிர்கட்குப் பயன்படுமாறு காரியப்படுத்தப் படுங்கால் நமக்குப் புலப்படும்படியாகவே நடைபெறும். இனி அது நமக்குப் புலப்படுமாறு இரண்டேயாம்; அவை ஒளிவடிவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/83&oldid=1589253" இலிருந்து மீள்விக்கப்பட்டது