உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

51

ஒலி வடிவும் ஆகும். விந்துவின் ஒளிவடிவு மின்னலிற்றோன்றிக் கட்புலனாய் வரும், அதன் ஒலி வடிவு எழுத்தொலிகளிற் றோன்றிச் செவிப்புலனாய் வரும். விந்துவின் ஒளியும் ஒலியும் பூதாகாயத்தை ஒரு பற்றுக்கோடாகக் கொண்டு அதன்பாற் றோன்றுதல்பற்றி அவை யிரண்டும் பூதாகாயத்தின் பண்புகள் என்று உரைத்தல் அமையாது. மின்னொளி சில கம்பிகளையும், வேறுசில பருப் பொருள்களையும் பற்றிக் கொண்டு விளங்கினும், அஃது அப்பருப் பொருள்களின் வேறாயினாற் போல, அதன் ஒளியும் ஒலியும் பூதாகாயத்தை ஒருவாயிலாகக் கொண்டு தோன்றினும் அஃது அவற்றின் வேறேயாமென்பது துணியப்படும். படவே, ஒளியாகிய மின்னும் ஒலியாகிய எழுத்தும் காரியப் பொருள்களாயிருத்தலின் அவை தமக்கு முதலான ஒரு காரணத்தை அவாவியே நிற்கும்; அக்காரணந் தான் யாதோ வெனின் அதுவே விந்துவென்று முடிக்கப்படும். இவ்வாற்றால் விந்து காரண நிலையில் மிக நுண்ணிதாய் நம்மனோர்க்குப் புலப்படாதாயினும் அது தன் காரிய நிலையில் மின்னாயும் எழுத்தாயும் புலப்பட்டே நிற்குமென்று

உணர்ந்துகொள்க.

இனி, இறைவனது சக்தி அளவிடப்படாத நுண்மையும் ஆற்றலும் வாய்ந்ததாகலின் அஃது இவ்வுலகங்களுக்கு முதலான அசுத்தமாயை நேரே சென்றியைந்து இயக்குமாயின் இஃது அதன் வேகத்தைத் தாங்க மாட்டாமையின் இவ்வுலகங்கள் தோன்றாவாம். அதுபற்றி அச்சக்தி நுண்பொருளியல்பில் ஒருவாற்றால் தன்னோடொத்தும், பருப்பொருளியல்பில் ஒருவாற்றால் அசுத்தமாயையோடொத்தும் நடுநிகர்த்ததாய் நிற்கும் சுத்தமாயை யெனப்படும் விந்து சக்தியோடுதான் நேரே இயைந்து நின் நின்று தனது வேகத்தை அதன்வாயிலால் அசுத்தமாயை தாங்குமளவாக வைத்துத் தணிவுபடுத்திப், பின்னர் அவ்வசுத்தமாயையை இயக்கி இவ்வுலகங்களையும் இங்வவுலகத்துப் பல்பொருள்களையுந் தோற்றுவியாநிற்கும். எனவே, சிவசக்தி நேரேசென்று இயைந்து நிற்குமிடம் விந்துவென்பது பெற்றாம்.

இனிச் சிவச்சக்தியால் உந்தப்பட்ட விந்துமாயை சொல் லொணா இயக்கம் உடைத்தாய்ச் சுழல அதன்கணின்றும் ஒரு நாதம் உண்டாம்; அந்நாதம் அசுத்தமாயையின் அணுக்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/84&oldid=1589256" இலிருந்து மீள்விக்கப்பட்டது