உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

❖ 25❖ மறைமலையம் - 25

டு

திரட்டி உலகங்களைப் படைக்கும் சிவசக்தியால் இயக்கப்பட்ட விந்து சுழிந்து இயங்குங்கால் வட்டவடிவும், அவ்வட்ட வடிவினின்று தோன்றும் நாதம் வரிவடிவும் உடையவாம். இவ்விந்து நாதங்களின் சேர்க்கையே கட்புலனாக இட்டு எழுதப்படும் வரி வடிவில் ஓ எனவும், பிள்ளையார்சுழி (உ) எனவும், வழிபடுங்குறியாக நிறுத்தப்படுங்காற் சிவலிங்கம் எனவும், ஒலி எழுத்தாகச் சொல்லப்படுங்கால் ஓங்காரம் பிரணவம் எனவும் தொன்றுதொட்டு ஆன்றோரால் வழங்கப்பட்டு வருகின்றது. விந்துநாதச் சேர்க்கையான ஓங்காரத்திற் றனது சத்தியோ டொன்றாய் நிற்குஞ் சிவம் ஆண்டு முனைத்து விளங்குதலாகிய இவ்வுண்மை தெரித்தற் பொருட்டன்றே திருமூலநாயனார்

"ஓமெனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓமெனும் ஓங்காரத் துள்ளே உருவரு ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்

ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே”

என்று அருளிச் செய்தார். மாண்டூக்கிய உபநிடதமும் இந்த அழியாத பொருள் ஓங்காரத்தில் இருக்கின்றது; இதுவே எல்லாம்; இதனுடைய விளக்கமே ய விளக்கமே இது; இறந்த காலத்தும் நிகழ்காலத்தும் எதிர்காலத்தும் உள்ள இவையெல்லாம் ஓங்காரமே; முக்காலங்களையும் கடந்து நிற்கும் அதுவுங்கூட ஓங்காரமே என்று பகருவதாயிற்று. இம் மண்டூக்கியோப நிடதத்திற்குக் கௌடபாதர் எழுதிய காரிகையும் “எல்லா உயிர்களின் நெஞ்சத்திலும் ஈசுவரன் ஓங்காரமாய் நிற்கின்றார்” எனப் புகலுகின்றது.கடவல்லியுபநிடதமும் “எல்லா மறைகளும் எந்தமொழியைக் கூறுகின்றனவோ, தபங்களெல்லாம் எந்தச் சொல்லைக் கிளிக்கின்றனவோ, பிரமசரியத் தொழுகுவோர் எந்தச் சொல்லை விழைகின்றனரோ அந்தச் சொல்லைச் சுருக்கமாக ஓம் என்று உனக்குச் சொல்லுகின்றேன் என்கின்றது.

""

இனி, வேதாந்த சூத்திரத்திற்குச் சங்கராசாரியர்க்கும் முன்னே பாடியவுரை வகுத்தருளிய நீலகண்ட சிவாசாரியர் ஓங்காரத்தின் பிரிவெழுத்துக்களாகிய அகார உகார மகாரம் எனும் மூன்றில் முதல்நின்ற அகாரம் இருக்குவேத முதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/85&oldid=1589258" இலிருந்து மீள்விக்கப்பட்டது