உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

66

53

மந்திரமாகிய “அக்நிமீளே” என்பதன் முதலிலும், இடை நின்ற உகாரம் எசுர்வேதத்தின் டையிலுள்ள “யோநிஸ் சமுத்திரோபந்து" என்பதன் நடுவிலும், கடைநின்ற மகாரம் சாமவேதத்தின் கடையிலுள்ள 'சமாநம்வரம்” என்பதன் ஈற்றிலும் நின்று மறைகளெல்லாம் ஓமென்னும் மொழியின் பொருளேயாமென்பதனை அறிவுறுத்தின என்று உரைப்பர்.

66

66

தகர

இனித் தமிழ்மறைகளுள்ளும், எல்லாம் ஓதாதுணர்ந்த திருஞான சம்பந்தப் பெருமான் அருளிச்செய்த முதன் மறையின் முதற் பதிகத்தின் முதலில் “தோடு” என்பதன்கண் வொற்றின் மேல் ஓவென்னும் எழுத்தும், பன்னிரண்டாந் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணத்து இறுதிக்கண் கெலாம்” என்பதன் ஈற்றில் மகரவொற்றும் நின்று தமிழ்ப் பன்னிரு திருமுறைகளும் ஓங்காரத்தின் பாலவென்பதனை னிதுணர்த்துதலும் குறிக்கொளற்பாற்று. 'தோடு' என்பதன் கண் ஓகாரம் தகரவொற்றின் மேனிற்றல், “ஓம் தத்ஸவிதுர்” என்னுங் காயத்திரி மந்திரத்தின்கண் உணர்த்துகின்றதென ஓரியைபுமின்றித் தமக்குத் தோன்றியவாறே கூறுவாருமுளர். முருகப் பெருமானே போல் தெய்வ அருண் மகவாய்த்தோன்றி ஆரியநான்மறைகளாலுங் காணப்படாத இறைவனையும் இறைவியையும் நேரே கண்டு தமிழ்ச்செழும் பாடல்களை அருள்பொருள்வளந் துறுமத் தேன் பெருக்பெடுத்தாற்போற் பொழிந்தருளிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் தாம் திருவருள் நெறியினை மக்கட்கு எடுத்துக் காட்டுதற்கு ஓர் ஒப்பற்ற கருவியாயிருந்த தமிழ்மொழி இழுமென் ஓசை வாய்ந்தது அன்பருள்ளத்தை எளிதிலே குழைந்துருகச் செய்து இறைவன் திருவடிக்கட் படுக்கும் பான்மைவாய்ந்து தூய ஓங்காரவடிவமாய் நிகழுதல் கண்டு, அதனை எல்லார்க்கும் ணர்த்துவான் வேண்டி அத்தமிழ் என்னும் சொல்லின் முதல் நின்ற தகரத்தின்மேல் அவ் ஓகாரத்தை இயல்பாகவே இயைந்து நின்ற “தோடு” என்னுந் யிட்டருளினாரென்றே யாங்கோடும் ஓங்காரம் ஆரியம் தமிழ் முதலான எல்லாமொழிகட்கும் பொதுவாயிருப்பவும் அதனைத் தமிழுக்கே உரியதென வரைந்து கூறுதல் யாங்ஙனமெனின்; ஓம் என்னும் ஒலியில் இனிய மெல்லோசையே நிறைந்திருத்தலும் வல்லோசை யில்லாமையும் சிறுமகாரும் உணர்வர்; உலகம் யாங்கணும் உள்ள மொழிகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/86&oldid=1589260" இலிருந்து மீள்விக்கப்பட்டது