உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறைமலையம் 25

ஓசை முறைகளை ஒரு சிறிது ஆய்ந்து காண்பார்க்கும் தமிழல்லாத மற்ற மொழிகளெல்லாம் உரத்த ஓசைகளும் த கனைக்கும் ஒலிகளும் நிரம்பி இன்னிசையிற் பழகிய செவி யுடையார்க்கு வெறுப்பினைத் தோற்றுவித்தலும், தமிழ்மொழி அத்தகைய உரத்த ஓசைகளுங் கனைக்கு யொலிகளே நிறைந்து எல்லார்க்கும் இன்பம் பயக்கும் நீரதாய் ஓங்கார உருவின தாயிருத்தலும் தெற்றென விளங்கும்.

அல்லதூஉம், ஓங்காரம் தமிழிற்குரிய ஓ வடிவினதாக ஏனை மொழிகளில் எழுதப் படுதலானும், ஓசையைக் குறிக்கும் ஓசை ஒலி என்னுந் தமிழ்ச் சொற்களின் முதலில் ஓகாரம் நிற்றல்போல ஏனைமொழிகளில் ஓசையைக் குறிக்குஞ் சொற்களில் அங்ஙனம் ஓகாரம் நிற்பக் காணாமையானும், ஓசையைக் கவரும் மக்களின் செவியின் வடிவை உற்றுநோக்கிப் பண்டைத் தமிழர் கண்டறிந்தா ரென்பது புலப்படாமையானும், காத்தல் என்னும் பொருள் ஓம் என்பதற்கு உண்டென்பது வடமொழியிற் கூறப்படினும் காத்தலெனப் பொருள்படும் ஓம்பு என்னும் முதனிலை தமிழின் கட் காணப்படுதல்போல ல வடமொழியிற் காணப்படா மையானும் ஓங்காரம் தமிழிற்கே பண்டுதொட்ட உரிமையுடைய தென்பது பெற்றாம். இங்ஙனம் அது தமிழிற்கு உரிமை யுடைத்தாதல் தெரித்தற்பொருட்டே திருஞானசம்பந்தப் பிள்ளையார் தமிழ் என்னும் பெயரின் முதலெழுத்தாகிய தகரத்தின்மேல் ஓகாரம் இயைப்பெற்ற 'தோடு' என்னுஞ் சொல்லை முதற்கட்பெய்துரைத்தருளு வாராயினரென்னு கடைப்பிடிக்க.

இனிப் புறத்தே காணப்படும் ஓங்காரஒலியில் இறைவன் விளங்கித் தோன்றி நின்று இவ்வுலகங்களை யெல்லாம் படைத்து இயக்குமாறுபோலவே, அகத்தே இவ்வுடம்பி னுள்ளும் அவன் அதன்கண் முனைத்துநின்று அதன் அகக்கருவி புறக்கருவிகளை இயக்கி அதனுள்வாழும் உயிர்க்குப் பெரிய தோர் உதவியைச் செய்துவருகின்றானென்பதும் அறியற்பாற்று. யாங்ஙனமெனிற் காட்டுதும். நமதுடம்பின் அகத்துள்ள சிறந்த உறுப்புகள் அத்துணையும் ஓகாரவடிவினவாய் இருத்தலை உடம்புநூல் வல்லார் எழுதிக்காட்டிய படங்களாற் கண்டு தெளியலாம். அவற்றுள் நமதுடம்பின் வளர்ச்சிக்கும் நிலை பேற்றிற்கும் இன்றியமையாக் கருவியான நெஞ்சப்பையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/87&oldid=1589262" இலிருந்து மீள்விக்கப்பட்டது