உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

55

வடிவமானத் தாமரை முகையை யொத்து ஓங்காரவடிவமாய் அமைந்திருக்கின்றது; இந்நெஞ்சப் பையினுள்ளே காணப்படும் மின்னொளியானது தன்னுட் கலந்து விளங்கும் இறைவனது திருமேனியாகும். இங்ஙனம் நெஞ்சப் பையிற் காணப்படும் அமைதியினையே உருவகப்படுத்தித் தில்லை சிற்றம் பலத்தே திருக்கூத்தியற்றும் முதல்வனாக வைத்து அறிவு நூல்கள் கூறாநிற்கும். நெஞ்சப் பையின் நடுவசையும் மின் னொளி இறைவனாகவும், அதன் அசைவு அவனது திருக் கூத்தாகவும், அங்குள்ள முதலெழுத்தின் ஒலி அவனது திரு வடியில் ஒலிக்கும் சிலம்பின் ஒலியாகவும் நெஞ்சப்பையின் சுற்றுவடிவு அவனைச் சூழ்ந்து விளங்கும் சுடரொளியாகவுங் கருதற்பாற்று. இவ்வியல்பு, “ஓங்கார மேநற் றிருவாசி யுற்றதனில்

நீங்கா எழுத்தே நிறைசுடராம் - ஆங்காரம்

அற்றார் அறிவர்அணி அம்பலத்தான் ஆடல்இது பெற்றார் பிறப்பற்றார் பின்”

என்னும் உண்மை விளக்கச் செய்யுளானும் "திருச்சிலம் போசை ஒலிவழியே சென்று நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற

நேர்பட அங்கேநின்றுந்தீபற’”

என்னும் திருவுந்தியார் செய்யுளானும் இனிதறியப்படும், இனி, இந்நெஞ்சப்பையேயன்றி, நமதறிவு விளக்கத்திற்கு நிலைக் களனாய் நிற்கும் தலையினுள் மூளையும், உண்டவுணவை ஏற்று உடம்புக்கு வேண்டும் பாலை அதனினின்று பிரித்துக் கொடுக்கும் தீனிப்பையும், தீனிப்பையினின்று பிரித்துக் கழிக்கப்பட்ட சக்கையை வாங்கி வெளிப்படுத்தும் மலக்குடரும், சிறுநீர்ப் பையும் எல்லாம் ஓகாரவடிவாய் அமைத்திருத்தலும் கருப்பையுள் வளருங் கருவும் முதுமைப் பருவம் வந்தபின் மக்களுடம்பிற் காணப்படும் கூன்வடிவம் அங்ஙனமே ஓகாரவடிவிற் காணப்படுதலும் உற்றறியற்பாலனவாம்.

அற்றேல்,

"ஓங்காரத் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள்கண்டத் தாயிடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/88&oldid=1589265" இலிருந்து மீள்விக்கப்பட்டது