உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் - 25

-

பாங்கார் நகாரம் பயினெற்றி யுற்றிடும் வீங்காகும் விந்துவும் நாதாமேல் ஆகுமே

وو

என்னுந் திருமந்திரத் திருப்பாட்டோடு, ஈண்டுஅடிகள் கூறிய “உய்யவென்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா” என்பது முரணுமாலெனின்; அற்றன்று, உடம்பின் தலை அடை கடை என்னும் மூன்றிடங்களினும் உள்ள மூளை நெஞ்சப்பை மலக்குடர் என்னும் மூன்றுறுப்புக்களும் ஓங்கார வடிவில் இருந்தாலும், இடையில் உள்ள நெஞ்சப்பை தலை குவிந்து அடி சிறிதுநீண்ட வட்டமாக இருத்தலின் அவ்வடிவு விந்துத் தத்துவம் மேற்பட்ட ஓங்காரமாயும், தலையின்கண் உள்ள மூளை முன்நெற்றியிலிருந்து கவிந்துபோய்ப் பிடரிலிருந்து மிக நுண்டு நிற்றலின் அது நாத தத்துவம் மேற்பட்ட ஓங்காரமாயும் நிற்க, உந்தியின் கீழ் உள்ள மலக்குடர் மட்டும் வரிவடிவில் எழுதப்படும்

வன்னும் வெழுத்தைப்போல் விந்து நாதங்கள் ஒத்துப் புலப்பட்ட வடிவுடைய ஓங்கார மாதல் கண்டு, உந்திக் கீழுள்ள ஓங்காரம் வரிவடிவில் எழுதப்படும் எழுத்துப் போல்வதாய் நம்மனோரால் எளிதில் அறியக் கிடத்தலானும், மல நீக்கத்தின் பொருட்டு முதற்கண் நினைக்கற்பால தாயிருத்தலானும் அதனை விதந்து அங்ஙனங் கூறினாராயினும், கீழ்நின்ற அதனை நினைந்து அவ்வாற்றான் அதனோடு மேலெழுந்து நெஞ்சத்தின் கண் விந்து வடிவாய்த் திகழும் ஓங்காரத்தைக் கண்டு மகிழு நிலையினையும்,

“ஒமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை ஆமென் றெழுப்பியவ் வாறறி வார்கள் மாமன்று கண்டு மகிழ்நதிருந் தாரே”

என்று வேறோதுதலின் திருமூலநாயனார்க்கு நெஞ்சத் தாமரைக்கண் ஓங்காரம் உளதென்று கோடல் உடன்பாடேயா மென்க.

இனி 'உள்ளம்' என்பதற்கு நெஞ்சம் என்னும் பொருளேயன்றி, அறிவு நிகழ்ச்சிக்கிடமான தலையினுறுப்பு என்றும் பொருள்கொள்ளக் கிடக்குமாதலால் ‘அவ்வுறுப்பி னுள் ஓங்காரமாய் நின்ற' எனவும் பொருளுரைத்துக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/89&oldid=1589268" இலிருந்து மீள்விக்கப்பட்டது