உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

57

விமலம் என்பது வடசொல்; இதன் முதல் நின்ற வி என்னும் உபசர்க்கம் (இடைச்சொல்) அன்மைப் பொருளை யுணர்த்தும். மலம், மாசு, அழுக்கு என்பன ஒரு பொருட்சொற்கள்.

விடை டைப்பாகா எருதிற்கு உரியவனே, எருதின்மேல் வருவோனே, தூய வெள்ளெருது மலம் அற்ற தூய உயிர்களுக்கு அடையாளமாகும். தூய உயிர்க்குத் தலைவனாய் அவற்றோடு உடனாய் நின்று இன்பத்தை ஊட்டுதல் முதல்வற்கு இயல்பாதல் பற்றி அவன் எருதினை ஊர்பவன், விடையேறி, விடைப்பாகன் என்று கூறப்படுவன். இனி எல்லா உயிர்கட்குமே தலைவனாதல் பற்றி அவன் விடைப்பாகன் என்று கூறப் பட்டான் எனினும் ஆம். இருக்கு வேதத்துள்ளும் இறைவன் ‘பிரஜாபதி' என்று அடுத்தடுத்துக் கூறப்படுதல் காண்க; ப்ரஜா என்னும் வடசொல் 'படைக்கப்பட்ட உயிர்கள்' என்னும் பொருளை உணர்த்தலி னாலும், அவ்விருக்கு வேதம் பிறி தோரிடத்து “இருகால் நாற்காற் பசுக்களுக்கு அதிபதி” என்று ஓதலினாலும், பசுவென்னுஞ் சொல்லும் பாசத்தினாற் கட்டப்பட்ட எல்லா உயிர்களையும் உணர்த்தலினாலும் முதல்வன் ‘பசுபதி’ எனவும், ‘விடைப்பாகன்' எனவும் சைவசமய நூல்களில் வழங்கப்படுகின்றன னென்க.

வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணி யனே' என ஆரிய நான்மறைகளால் இறைவனியல்பு முற்ற அறியப் படாமையின் இங்ஙனம் அருளிச் செய்தார். அவற்றால் அவன் அங்ஙனம் அறியப்படாமைக்குக் காரணம் மேலே விளக்கிப் போந்தாம்; ஆண்டு காண்க.

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

40 அஞ்ஞானந் தன்னை அகல்விக்கு நல்லறிவே.

வெய்யாய் - வெம்மையுடையோனே, விந்து தத்துவத்தின் வாயிலாய் தீயின்கண் முனைத்துத் தோன்றும் இறைவனியல்பு வெப்பம் உடையாதிருத்தலின் இங்ஙனம் கூறினார்.

-

தணியாய் குளிர்ச்சி யுடையோனே, நாததத்துவத்தின் வாயிலாய் நீரின்கண் முனைத்துத் தோன்றுஞ் சிவசத்தியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/90&oldid=1589270" இலிருந்து மீள்விக்கப்பட்டது