உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

❖ - 25❖ மறைமலையம் - 25

இயல்பு தட்பம் உடையதா யிருத்தலின் இங்ஙனம் அருளினார். தண், தட்பம் - குளிர்ச்சி.

-

வேள்வி வேட்போன் உள் இயமானன் ஆம் விமலா விளங்கும் தூயோனே. 'யஜமாந :' என்னும் வடசொல் வேள்வி இயற்றும் அல்லது இயற்றுவிக்கும் தலைவனை உணர்த்துவது.

தலைமைபற்றி வேள்வி வேட்போன்மாட்டு இறைவன் விளங்குவான் என்று கூறினமையால், அவனைப்போன்ற எல்லா உயிர்களுள்ளும் முதல்வன் இருப்பான் என்பது தானே பெறப்படும்; என்னை?

66

ஒரு பெயர்ப் பொதுச்சொல் உள்பொரு ளொழியத் தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்”

என்றார் ஆசிரியர்

தொல்காப்பியனாராகலின்

(தொல்காப்பியம் சொல்லதிகாரம் 49ஆம் சூத்திரம்) பிற மரங்களும் உளவேனுங் ‘கழுகந் தோட்டம்' என்று தலைமை பற்றிக் கழுகின் மேல் வைத்து வழங்குதல்போல என்க.

அடிகள்

எல்லா உயிரினுள்ளும் இறைவன் விளங்குதல் பற்றி இங்ஙனங் கூறிய கருத்தறியாது, முதல்வனே உயிர்களாயினான் என்னும் ஏகான்ம வாதத்திற்கு இதனை எடுத்துக் காட்டுவாரும் உளர். எல்லா முதன்மையும் ஆற்றலு முடைய இறைவன் அவையில்லா உயிர்களாதல் உருவாற் றானும் பொருந்தாமையானும், “அறிவாய் உள்ள ஈசனும் அறியாமையோடு கூடிய அநீசனுமான இருவரும் பிறவாதவர்” என்று சுவேதா சுவதரோபநிடதம் சீவான்ட பரமான்ம வேறுபாடு நன்கு தெரித்தோதலானும், உயிரினும் உயிரில் பொருளினும் இறைவன் புணர்ந்து நிற்பனே யல்லாமல் தானே அவைகளாய்த் திரியா னென்பது புலப்பட "நிலன் நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்” என்று அடிகள் பிறாண்டுங் கிளந்து கூறுதலானும் அவ்வாறு ஏகான்ம வாதம் ஏற்றுவார் உரை ஒரு சிறிதும் பொருந்தாதென்க.

பொய் ஆயின எல்லாம் போய் அகலவந்து அருளி பொய்யான நினைவுஞ் சொல்லும் செயலும் எல்லாம் போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/91&oldid=1589272" இலிருந்து மீள்விக்கப்பட்டது