உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

6

59

நீங்கக் குருவடிவில் வந்து அருள்செய்து, மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே - உண்மையறிவாகி ஒளி பிறழுகின்ற உண்மை ஒளியே.

‘பொய்’ என்பது பொந்து எனப் பொருள்படும்; அதாவது வெளியே ஒருபொருள் போற் றோன்றி உள்ளே வெறும் புரையாய் இருப்பது; இங்ஙனமே ஒருவர் நினைவுஞ் சொல்லுஞ் செயலும் ஆராய்ந்து காண்பார்க்கு உள்ளீடு இல்லாதனவாய்ப் புலப்படு மாயின் அவை பொய்யென்று சொல்லப்படும். உள்ளீடு இல்லாப்புரை பயன்படாமை போலப் பொய்யான நினைவு சொற் செயல்களும் பயன்படாமையேயன்றித் தீவினையையும் பயப்பனவாம். இனிப் பரிமேலழகியார் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் கருத்துப் பற்றி “நன்மை பயவாத நிகழாதது கூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மை என உரைப்பர் (திருக்குறள் - வாய்மை - 2) நன்மை பயவாதது உண்மையே யாயினும் பயன்படாமையின் அஃது உள்ளீடு இல்லாததேயாம்; நன்மை பயப்பது உண்மை யன்றாயினும் அது பயன்படுதலின் அஃது உள்ளீடு உடையதே எயாம். நாயனார் (புறநானூறு - 4) “பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்” என்பதிற் புரையென்னுஞ் சொல்லையும் உடம்பொடு புணர்த்து ஓதினாராகலின், பொய்யென்பது பயன்படுதலாகிய உள்ளீடு இல்லாத புரையேயாமென்று உணர்ந்து கொள்க. புரை, பொய், புழை, பொந்து என்பன உட்டொளையினை யுணர்த்தும் ஒரு பொருட் பெயர்கள்.

L

அறியாமை வழிப்பட்ட உயிர்களின் நினைவு சொற் செயல்கள் வீடுபேற் றுறுதிப்பயனைத் தராமற் பொய்படுதலின், அவ்வறியாமையினை முற்றுந்துறந்து அவற்றை வீடுபேற்றின்கட் செலுத்தும் உண்மை யறிவொளியாய்த் தோன்றி இறைவன் தமக்கு அருள் வழங்கிய பான்மையினைக் கூறினார்.

மிளிர்தல் - பிறழ்தல்; மிகுந்த ஒளி விளங்குங்கால் அது பிறழ்வதுபோற் றோன்றலின் அங்ஙனம் உரைத்தார்.

‘சுடர்’ ஒளியினை யுணர்த்தல் “தெறுசுடரொண்கதிர் ஞாயிறு” என்பதன்* உரையிற் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/92&oldid=1589275" இலிருந்து மீள்விக்கப்பட்டது