உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் - 25

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப்பெருமானே எவ்வகையான அறிவும் இல்லாத அடியேனுக்கு இன்பத்தைத் தந்தருளி பெருமானே.

ஞானம் பாசஞானம் பசுஞானம் பதிஞானம் என மூன்று வகைப்படும். இவற்றுட் பாசஞானமாவது ஆணவம் மாயை கன்மம் என்னும் இவற்றின் இருப்பும் இயல்புகளும் அறிவது; பசுஞானமாவது உயிர் அம்மும்மலங்களோடு ஒன்றாய் நிற்குந் தன் இயல்பும், அவற்றின் வேறாய் நிற்கவல்ல தனது இயற்கையும் அறிவது; பதிஞானமாவது இறைவனிருப்பும் ப இறைவனிருப்பும் இயல்பும் உணர்ந்து அவன் திருவடியோடு தலைக்கூடிநிற்கு மாற்றினை அறிவது இனி இவற்றிற்குச் சிவஞான சித்தியாரில்,

‘வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம் விரும்பசபை வைகரியா தித்திறங்கண் மேலா நாதமுடி வானவெல் லாம்பாச ஞானம்

நணுகியான் மாஇவைகீழ் நாட லாலே

காதலினால் நான்பிரம மென்னு ஞானங்

கருதுபசு ஞானம்இவ னுடலிற் கட்டுண்

டோதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம் ஒன்றாகச் சிவன்இயல்பின் உணர்ந்திடுவன் காணே

என்று ஓதியவாறே கொள்ளலும் ஒன்று.

எ ஞானம் எஞ்ஞானம் என்றாயின.

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே அறியாமையை மாயை கன்மங்களால் அகலச்செய்யும் நன்மைபயக்கும் அறிவாய் இருப்பவனே.

L

ந ஞானம் என்னும் வடசொற்கள் புணருங்கால் நகரத்தின் மேல் நின்ற அகரம் நிற்க ஒற்றுக்கெட்டு அகரத்தின்முன் ஞகர வொற்று மிக்கு ‘அஞ்ஞானம்' என்று ஆயின; முதல் நின்ற நகர இடைச்சொல் மறுதலைப்பொருளை உணர்த்தலின், இஃது அறிவுக்கு மறுதலையான அறியாமையை உணர்த்தும். இனி இதற்கு இன்மைப் பொருள் கொண்டு அறிவு இல்லாமையே அறியாமையாம்; அறியாமை ஒருபொருளன்று எனக் கூறு வாரும் உளர். அறியாமை இல்பொருளாயின் அஃது அறிவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/93&oldid=1589277" இலிருந்து மீள்விக்கப்பட்டது