உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

61

மறைக்குந் தன்மையுஞ் செயலும் இல்லாதாகல் வேண்டும்; மற்று அஃது எல்லா உயிர்களின் அறிவு செயல் வேட்கைகளை மறைக்குந் தன்மையுந் தொழிலும் உடையதாதல் கண்கூடாய் அறியக் கிடத்தலின் அஃதோர் உள்பொருளையா மென்று அறிக அஞ்ஞானம். அவித்தை ஆணவம் அறியாமை என்பன ஒரு பொருட் சொற்கள்.

னி அஞ்ஞானந்தன்மை அகற்றும் என்னாமல் அகல் விக்கும் என்றமையால், உயிர்களைப் பற்றிய அறியாமைக் கறையை இறைவன் நீக்குகின்றுழி மாயையைக் காரியப்படுத்தி உடம்பையுங் கருவிகளையும் உலகங்களையும் நுகர்ச்சிப் பொருள்களையுங் கொடுத்து, அவை தம்மால் இருவினைகளை யெழுப்பி இவ்விரண்டாலும் அதனை நீக்குவானென்பது பெற்றாம்.

நல் அறிவு - நன்மையைத் தரும் அறிவு. “வால் அறிவன் என்று திருவள்ளுவ நாயனார் ஓதுதலின், *இறைவனறிவுக்கு இயல்பாகவே தூயதாய் நிற்றலென்

நன்மையாவது றுரைத்தலுமாம்.

ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருடருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

45 மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்.

-

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் ஆக்கப்படுதலும் ஒருகால வரையில் நிற்றலும் முடிவும் இல்லாதோனே, அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் - எல்லா உலகங்களையும் நீ படைப்பாய் காப்பாய் அழிப்பாய் முடிவில் உயிர்கட்கு அருளையுந் தருவாய், என்னைப் போக்குவாய் - என்னைப் பல்வகைப் பிறவிகளிற் செலுத்துவாய், என்னை நின்தொழும்பில் புகுவிப்பாய் என்னை நினது திருத்தொண்டிற் புகும்படி நின் அருளாற் செய்வாய், நாற்றத்தின் நேரியாய் - பூவின் மணம் போல் அன்பர் உள்ளத்தில் இசைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/94&oldid=1589279" இலிருந்து மீள்விக்கப்பட்டது