உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மறைமலையம் - 25

-

திருப்பவனே, சேயாய் அன்பரல்லாதார்க்கு எட்ட இருப்பவ னே, நணியாய் - அன்பராயினார்க்குக் கிட்ட இருப்பவனே, மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - சொல்லுக்கும் நினைவுக்கும் அப்பாற்பட்டு நின்ற மறைபொருளாயுள்ளவனே, கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற்போல-கறந்த பாலிலே சருக்கரையுந் தேனுங் கலந்தாற்போல, சிறந்த அடியார் சிந்தனையுந் தேன் ஊறி நின்று சிறந்த அடியவர் உள்ளத்திலே தேன்போல் இனிமை ஊறி நிலைபெறத் தங்கி, பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் - எடுத்த பிறவியைத் தொலைக்கும் எங்கள் பெருமானே என்றவாறு.

-

‘ஆக்கம் அளவு இறுதி இல்லாய்' என்றது படைப்பு நிலை இறுதி என்னும் முத்தொழில்களிற் பட்டுச் சுழலும் உயிர்களுக் கும் உலகங்களுக்கும் முதல்வனாய் அம்முத்தொழில்களைச் செய்பவன் தனக்குமேல் ஒரு முதல்வன் இன்மையாலும், முத்தொழிலிற் படுதற்கு ஏதுவான இருவினைகளும் அறியா மையும் தன்பால் இன்மையாலும் தான் அங்ஙனம் முத்தொழி லிற்படுவான் அல்லன் என்பதனை உணர்த்திற்று. உலகத்திற் பல்வகைச் சமயத்தாரும், படைக்கப்பட்டுப் பிறந்து சிலகாலம் இருந்து இறந்துபோன உயிர்கள் சிலவற்றை, அவ்வவற்றிற் காணப்பட்ட பேரறிவுச் செயல் பேராண்மைச் செயல்களைக் கண்டு மயங்கித் தெய்வங்களாக வணங்கி வருகின்றனர். முத்தொழிலிற் பட்டு மறைந்து போன அச்சிற்றுயிர்கள் பிறவற்றின் பொருட்டு அம்முத்தொழில்களைச் செய்ய மாட்டுவன அல்ல. அம்முத்தொழில்களிற் றான் படாமல் அவற்றிற்கு முதல்வனாய் நின்று எல்லா உயிர்களையும் ஈடேற்றும் இரக்கத்தால் அவற்றைச் செய்வோனே முழுமுதற் கடவுள் என்பது தெரிவித்தாராயிற்று.

ஆக்கம் - ஆக்கப்பட்டது; 'அளவு, அங்ஙனம் ஆக்கப் பட்டது நடைபெறும் கால அளவு; இறுதி முடிவு.

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்' என்பதன்கண் இறைவன் செய்யும் ஐந்தொழில்களில் நான்கி னைக் கூறினமையால், இவற்றின் இடையே நிகழும் ‘மறைத்தல்’ என்னுந் தொழிலும் உய்த்துணரப்படும், இவற்றுள் ‘ஆக்கல்’ என்பது அறியாமையிற் கட்டுண்டு கிடந்த உயிர்க்கு உடம்பைக் கொடுத்து இருவினைகளை எழச்செய்து அவ்வாற்றால் அறிவைத் தோற்றுவித்தல்; காத்தல் என்பது எடுத்த உடம்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/95&oldid=1589281" இலிருந்து மீள்விக்கப்பட்டது