உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

63

நின்று இருவினைப் பயன்களை நுகரும் முகத்தால் அறிவுவளர அறியாமை தேயச்செய்தல்; அழித்தல் என்பது இருவினை நுகர்ச்சிக்கண் உடம்பு மெலிந்து உயிர் அலுத்துப்போக மீட்டும் படைத்தற்கு முன் சிலகாலம் வரையில் இளைப்பாறச் செய்தல்; ‘மறைத்தல்’ என்பது பிறவிகடோறுந் தொடர்புபட்டுவரும் இருவினை நுகர்ச்சிகளை அடுத்தடுத்து மறக்கச் செய்து மேலும் மேலும் அவற்றை நுகருதற்கண் அவாவினை எழுப்புதல்; அருளல்', என்பது இருவினைப்பயனும் நுகர்ந்தொழித்து அறிவு கிளர்ந்து அறியாமை வலி அடங்கியபின் தனது திருவடிப் பேரின்பத்தை வழங்குதல் உயிர்கள் பொருட்டு இறைவன் செய்யும் ஐந்தொழில்களின் தன்மை இவ்வாறாதல்,

"ஏற்றஇவை அரனருளின் திருவிளையாட்டாக

இயம்புவர்கள் அணுக்கள்இடர்க் கடல்நின்று மெடுத்தே

ஊற்றமிக அருள்புரிதல் ஏது வாக

உரைசெய்வர் ஒடுக்கம்இளைப் பொழித்தல் மற்றைத்

தோற்றமல பாகம்வரக் காத்தல் பாகந்

துய்ப்பித்தல் திரோதாயி நிறுத்த லாகும்

போற்றலரும் அருள்அருளே யன்றி மற்றுப்

புகன்றவையும் அருளொழியப் புகலொ ணாதே”

என்னுஞ் சிவப்பிரகாசத் திருவிருத்தத்தால் அறியப் படும். அற்றேல், சிவஞானபோதத்தும், வடமொழியில் வேதாந்த சூத்திரத்தும் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் தாழிலின் மூன்றே சொல்லப்பட்டதல்லால், மறைத்தல் அருளல் என்னும் இரண்டுங் கூட்டி ஐந்தொழில் சொல்லப் படாமை என்னை யெனின்; படைத்தல் முதலாகிய மூன்றும் இறைவன் செய்தல் அம்முகத்தால் உயிர்கட்குத் தனது பேரின் பத்தை அருளுதற் பொருட்டே யாகலானும், அம்முத் தொழில்கள் நிகழும்வழி உயிர்கள் தாம் முன் நுகர்ந்த இன்ப துன்பங்களை இடையிடையே மறந்தாலன்றி மேலும் அவற்றை நுகருதற்கான மன வெழுச்சி செல்லாமையின் ஆண்டு அம் மறதியினைப் பயத்தற்கு மறைத்தற் றொழிலும் இன்றியமையாது வேண்டப்படுமா கலானும் அடங்குமென்று சிவஞானமுனிவர் அருளிச்செய்த மையானும்* முத்தொழில் கூறவே ஏனை ரண்டு தொழிலுந் தாமே பெறப்படும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/96&oldid=1589283" இலிருந்து மீள்விக்கப்பட்டது