உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

  • மறைமலையம் 25

― -

தொழும்பு, தொண்டு, அடிமை என்னுஞ் சொற்கள் ஒரே பொருளை யுணர்த்தல் திவாகரம் பிங்கலந்தைகளான் அறிக.

ஏனையோர் உள்ளங்களிற் புலப்படாதுநிற்கும் இறைவன் அன்பருள்ளத்திற் பூவின்கண் எழும் நறுமணம்போல் விளங்கி இசைந்திருத்தலின் ‘நாற்றத்தின நேரியாய்' என்றார்; அடிகள் பின்னும் “உற்றவாக்கையில் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போற், பற்றாலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்' என்று கூறுதலுங் காண்க. இனி இங்ஙனமன்றி ‘ஆற்றத்தின் நேரியாய்' என்று பாடம் ஓதுவாரும் உளர். அது சிறவாமை அவர் அதற்குக் கூறும் ‘செம்மையாகிய நெறியை யுடையவனே' என்னும் பொருளால் அறிந்துகொள்க.

சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாதது மறைபொருளே யாதலின் அவனை ‘மறையோன்' என்றார்; இனி மறையோன் என்பதற்கு வேதியன் என்றுரைப்பாரும் உளர்; அது பொருந்து மேற் கொள்க.

கன்னல் - சருக்கரை*

-

திவாகரம்

'நெய்' இங்கே தேன்நெய் என்னும் பொருட்டாம்; இச் சொற்கு இப்பொருள் உண்மை “நீல் நெய்தாழ்கோதை அவர் விலக்க நில்லாது" என்னும் பரிபாடல்* (*-11ஆம் பாடல் 124ஆம் அடி) அடிக்குப் பரிமேலழகியார் கூறிய உரையால் அறியப்படும்.

50

நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

புறந்தோல்போர்த் தெங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

55 மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் உருகும்

60

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/97&oldid=1589286" இலிருந்து மீள்விக்கப்பட்டது