உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

-

65

-

-

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் - நிறங்கள் ஓர் ஐந்து உடையவனே, விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய் வானுலகத்து வாழும் தேவர்கள் போற்றவும் அவர்க்கு வெளிப் படாமல் மறைந்திருந்தனை, எம்பெருமான் எம்பெருமானே, வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை கொடுவினையேனது அறிவு மறையும்படி மூடின மாய இருளை, அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டி - நல்வினை தீவினை என்னும் அரிய கயிற்றாற் பிணித்து, புறம்தோல் போர்த்து வெளியே தோலைப் போர்வையாக இட்டு, எங்கும் புழு அழுக்கு மூடி எங்குமுள்ள புழுக்களும் அழுக்குகளும் தெரியாமல் மறைத்து, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை - மலம் வடியும் ஒன்பது வாயில்களையுடைய குடிசையை, மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய - கலங்கும்படி புலன்கள் ஐந்தும் மாயத்தைச் செய்ய, விலங்கு மனத்தால் எதிர் நின்று தடுக்கும் மனத்தினால், விமலா மாசற்றவனே, உனக்குக் கலந்த அன்பு ஆகிக் கசிந்து உள் உருகும் நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி - உன்னிடத்துக் கலந்த அன்புவளர நெகிழ்ந்து உள்ளே உருகும் நன்மை சிறிதும் இல்லாத சிறியேனுக்குக் கொடுத்து, நிலம் தன்மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி - இந்நிலத்தின் மேலும் குருவடிவில் வந்தருள்செய்து பெருமைமிக்கதிருவடி களையும் காட்டி, நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயின் சிறந்த தயாவான தத்துவனே - நாயினும் இழிவாய்க் கிடந்த அடியேனுக்குத் தாயினுஞ் சிறந்த அருள்வடிவான மெய்யனே என்றவாறு.

-

'நிறங்கள் ஓர் ஐந்துடையாய்', என்றது இறைவன் மண் புனல் அனல் கால் வான் என்னும் ஐம்பெரும் பொருள்களினும் இரண்டறக் கலந்து நிற்றலால் அவற்றிற்குரிய ஐவகை நிறங்களும் இறைவற்கு உரியனவாகச் சொல்லியவாறாம்; மண்ணின் நிறம் பொன்மை, புனலின் நிறம் வெண்மை, அனலின் நிறம் செம்மை, காலின் நிறம் கருமை, வானின் நிறம் புகைமை; இங்ஙனம் இவ்வைந்தும் ஐவகை நிறம் உடையவாதல். உ

ம்

"மண் புனல் அனல் கால் வான்பால் வடிவுநாற் கோண மாகுந் தண்பிறை மூன்று கோணந் தகுமறு கோணம் வட்டம் வண்பொன்மை வெண்மைசெம்மை கறுப்பொடு தூமவன்னம் எண்டரும் எழுத்துத் தானும் லவரய வவ்வு மாமே” என்னுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/98&oldid=1589288" இலிருந்து மீள்விக்கப்பட்டது