உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

❖ LDMMLDMOLD - 25❖ மறைமலையம்

சிவஞானசித்தியார் திருவிருத்தத்தான் உணர்க. வெண்மை என்பது எல்லா நிறங்களும் ஒன்று சேர்ந்ததே யாகலின் நீருக்கு உண்மையாக வுள்ளது நீலநிறமேயாம்.

இனி 'நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்பதற்கு “வித்தை யோடீசர் சாதாக்கியஞ் சத்தி சிவங்கள் ஐந்துஞ் சுத்த தத்துவஞ் சிவன்றன் சுதந்திர வடிவமாகும்" என்று சிவஞான சித்தியாரிற் கூறப்பட்டவாறு சுத்தவித்தை ஈசுரம் சாதாக்கியம் சத்தி சிவம் என்னுஞ் சுத்த தத்துவங்கள் ஐந்தினும் இறைவன் விளங்கி நிற்றலால் அவ்வுயல்புபற்றி அவன் ஐவகை வடிவினனாக வைத்து ஓதப்பட்டான் என்று கூறுதலும் ஒன்று. ‘விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய்' என்றது தேவர்கள் தமக்குள்ள சில சித்திகளாற் றம்மை முதல்வராகக் கருதிச் செருக்குதலான் அவர்க்கு இறைவன் புலனாகாது நின்று அவர் செருக்கை அறுப்பனென்று கூறியவாறாம். தேவர்கள் உதவியைச் சிறிதும் வேண்டாது இறைவன் திரிபுரங்களை எளிதிலே நகைத்து எரித்து தொலைத் திருக்கவும், அவர் அதனை உணராமல் தாந் தாமும் அவ்வெற்றி க்கு உரியராகக் கருதித் தம்முள் இறுமாந்தமையும், அது தெரிந்து முதல்வன் இயக்க வடிவங்கொண்டு அவர்கள் எதிரில் எழுந்தருளி அவர்களான் அறியப்படாது மறைந்தருளினமையும் கேநோபநிடத்தின்கண் விளக்கமாகச் சொல்லப்பட்டிருத்தல் காண்க. இன்னுந் “தேவர்கள் அவனை அறிவோம் என்று ஓடியும் அவர்களாற் பற்றப்படாது அவன் அவர்களைக் கடந்து போயினான் என்னும் ஈசாவாசியோபநிடதவுரையும்

99

6

இதனோடு ஒத்துநோக்கற்பாலதாம்.

வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை' என்பதில் மாய இருள் என்பது வஞ்சனையைச் செய்யும் மாயையை உணர்த்திற்று. உடம்புக்கும் உலகங்களுக்கு மெல்லாம் முதற் பொருளாவது மாயை என்று சொல்லப்படும் மா என்னுஞ் சொல் உலகத்தின்கட் பரந்து வழங்கும் எல்லா மொழிகளினும் ஈன்றாளை உணர்த்தக் காண்கின்றோம். இது சிறுமகார் வாயில் இயற்கையாய்ப் பிறக்குங்கால் ‘அம்மா’ என்று ஒலிக்கும். மக்களைப் பிறப்பிக்குந் தாய் மா எனப் பட்டாற்போல, உலகங்களையும் உடம்புகளையும் தன்கட் டோற்றுவிக்கும் முதற் பொருளும் மாயை எனப்பட்டது.இம் மா என்னுஞ் சொல்லுக்குப் பிறப்பித்தல் என்னும் பொருளேயன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/99&oldid=1589291" இலிருந்து மீள்விக்கப்பட்டது