உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

83

மரபறிந்தார்க்குடம்பாடாகாதென்க. ஆன்மாவையே கடவுள் என்று கொண் டால் பரமான்மாவை எதுவாகக் கொள்ளது? ஆன்மா அருளைப் பெறுவதும், பரமான்மா அருளைப் புரிவது மாகியதன்மைகளை யுடையனவாம். ஆன்மாவே கடவுளா னால், அது யாருக்கு அருள் புரியத்தக்கது? ஆன்மாவாகிய தனக்குக் கடவுளாகிய தான் அருள் புரிந்திடும் போலும்.இது தன்னுடையதோளில் தானேயேறி விளையாடிய தோடொக்கு மென்க. “தன்னிற்றன்னைத் தானேகாணல், கண்ணிற்கண்ணைக் காணவும்படுமே என்று கழித் தனரிதனைச் சைவத்தலைவ ரென்க. அன்றியும், சுருதி

3333

மன

" ఆత్మైనంపరమాత్మానం అంతరాత్మాన మేవచ జ్ఞాత్వాత్రివిధమాత్మానం పరమాత్మా సమాశ్రయేత్ I' என்று கூறி “ 38 88 என்று முடிவு கூறியது. இதில் ஆத்மாவும் அந்தராத மாவும அநாசிரய பதார்த்தங்களென்று வர்ஜிக்கப்பட்டன. இங்ஙனமாக, ஆன்மாவே பரவஸ்துவா யிடுதல் எங்ஙனோ சிறக்கும்? அன்றி, ஆன்மாவும் பரமான்மாவும் ஒன்றாயிடுதலும் யாங்ஙனோ நிலைக்கும்? இவ்வாறு பகுத்துணருமறிவிழந்த பூர்வபட்சியார் “ஆன்மா வைத் தவிரப் பிரமமில்லை யென்பதிற் குற்றமென்ன” என்றும், “அஸ்தத்தைத் தவிரக் கையில்லையென்றால் அது குற்றமா” என்றும்,“ஆன்மா என்கிற சால் பிரமத்துக்குப் பரியாய நாம் மென விவரமறியாது போனால் அத்வைதிகளுக் காகவேண்டுவ தன்ன என்றும் தமதாபாசத்தைச் சோனை மாரியாகப் பொழிந்தார். பிரமத்துக்கு மாத்திரமே ஆன்மா என்னும் பேர் சிறவாமல் ஜீவனுக்கும் அது சிறந்தமையால் இவரது முதல் வாக்கியம் முதலறுந்தழிந்தது. அஸ்தம் - கைபோலாகாமல் சிவசீவர்கள் சூத்ரதாரி-பதுமை போல விஜாதியான இரு பொருள்களாகத் துணியப்பட்டமையால் இவரது இரண்டாவது வாக்கியம் இடுப்பொடிந்து வீழ்ந்தது. ஆன்மா என்கிற சொல் ஜீவனுக்குப் பரியாயமும், பரமான்மா என்கிற சொல் பிரமத்துக்குப் பரியாயமுமாயிடுதல் சித்தமாயின மையால் இவரது மூன்றாவது வாக்கியமும் முகங்கவிழ்ந்து போயிற்று. ஆன்மா என்கிற சொல் கடவுள் என்று பொருள் படுவதாகச் சிலவசனங்களை இவரெழுதிக் காட்டியிருக் கின்றார். அவ்வான்மா பரமான்மாவேயாம். அது ஜீவான்ம பரமாகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/116&oldid=1590157" இலிருந்து மீள்விக்கப்பட்டது