உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

-

மறைமலையம் - 26

-

என்று சித்தாந்தமுக்தாவளி வியாக்கியான வாயிலாக விதந்துரைத்தார். இங்ஙனம் கண்ணுக்கு ஒளியுளதாதல் இருடிகளாலும், மற்றைத் தார்க்கீகர்களாலும் அங்கீகரிக்கப் பட்ட தொன்றாம். அத்துவித ஆசாரியர்களுக்கும் அத்துவித கிரந்தங்களுக்கும் விரோதமுற்றதின்றாம்; மறுக்கப்பட்டது மின்றாம்; நான்கு சாஸ்திரபண்டிதர்களாயுள்ள ஸ்ரீ சிவ குமார பண்டிதர் கங்காதரசாஸ்திரியார் மஹாமஹோ பாத்தி யாய ராகிய ஸ்ரீ தியாகராஜ மகிராஜர் முதலிய பாரத கண்டத்துப் பெரும் புகழ்படைத்த சமஸ்த பெரியோரனை வராலும் ஒத்தமனசோடு அங்கீகரிக்கப்பட்ட தொன்றாம். இங்ஙனமாக, வடமொழிப் பயிற்சி எட்டுணையுமின்றி, தமிழிலேனும் நிரம்பிய உணர்ச்சியின்றி, கல்லாதான் சொற் காமுறுதல் என்ற திருவாக்கை முற்றும் மறந்து மாயாவாதி கண்ணுக்கொளி யில்லை யென்று வாதிடுவது என்பெற வோ?

என்றுவிளக்கிய சிறிது பாகத்தையே யீண்டெடுத் தழுதினோம். இவரெழுதிய பகுதிகள் மலையிலக்காயிருக் கின்றன. அவற்றை யொருங்கே திரட்டி வெளிப்படுத்தி யுபகரிப்பது சைவசமயிகளுக் கின்றியமையாப்பெருங் கடமையாம். திருவருள் கூட்டி முடிக்கக்கடவது. இன்னும் ஸ்ரீ வேங்கடரமணதாசரவர்கள் ஸ்ரீஸத்யோஜாத சிவா சாரியார் முதலிய சாம்பவமணிகளும் இத்தூர்த்த மாயா வாதிகளது கொட்டமடக்கிய விஷயங்கள் பலவுள. அவைகளையுந் திரட்டி நம்மவர் வெளியிடுவது ஆவசியகமாம்.

-

இவ்வாறு பலஸாதுக்கள் பிரவாததித்துவரு மருமை களைக் கண்டு மாயாவாதப்படிறா மனம் பொறாது மானம் பொங்கி யெழுந்து பின்னுங் குறை கூறித்தலை நீட்டியது கண்டு (அச்சாம்பவமணிகளதுதிருவடித்தாமரைகளைச்சிரமேற்

சூடிய) யாமுஞ் சிலவரைந்துள்ளேமாகையால், அதனையும் ஈண்டெழுதி வெளிப்படுத்துகிறோம்.

அருந்தாபத்திப் பிரமாணம்

இப்பிரமாணத்தில் இயல்பறியும் வன்மையின்மை யாலோ? தம்மதத்தை நியாயவழியாகவல்ல துரபிமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/143&oldid=1590187" இலிருந்து மீள்விக்கப்பட்டது